பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மு. பரமசிவம் :

அவளைத் தேற்றிவிட்டு வெளியேறுகிறார். அருள்மொழி சிலையிடம் குனிந்து அழுகிறாள்.

சித்திர மண்டபத்துக்குள்ளே இளவரசன் விக்கிரமனிடம் கடைசி முறையாக விவரங்களைக் கூறுகிறார் பார்த்திப மகாராஜா. விழியிலிருந்து வழியும் நீருடன் தலை குனிந்தபடி அரசரின் பேச்சை, விக்கிரமனை விடக் கவனமாகக் கேட்கிறான் ராஜ விசுவாசி பொன்னன்.

பார் : குழந்தாய்... இன்னும் கொஞ்சம் வயதான பிறகு இதற்குள்ளிருக்கும் சித்திரங்களை உனக்குக் காட்ட வேணுமென்றிருந்தேன்... ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா, இதுவரை இந்த மண்டபத்துக்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. வேறு யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததுமில்லை. வேறு யாரும் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பியதும் இல்லை. இந்தச் சமயத்தில் பொன்னன் தீவர்த்தியுடன் சுவரருகே சென்று உற்றுப் பார்க்கிறான். பார் தீவர்த்தியைத் தூக்கிப் பிடி! சுவருக்குச் சமீபமாகக் கொண்டு போகாதே. புகை பட்டுச் சித்திரங்கள் கெட்டுப் போகும். பொன் : உத்தரவு மகாராஜா.

பார் : குழந்தாய்... இந்த சித்திரத்தைப் பார்... என்ன

தெரிகிறது?