பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 93

பார் :

பார் :

மண்டபத்திலேகூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே!

(விக்கிரமனை அணைத்துக்கொண்டு) என் கண்ணே! என்னுடைய சித்திரத்திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த ஏக்கம் இன்று தீர்ந்தது.

ஆமாம். ஜீவன் ததும்பும் இந்தச் சித்திரங்களை

நீங்கள் ஏன் இருட்டு மண்டபத்திலே பூட்டி வைத்திருக்க வேண்டும்? உலகம் அப்படிப்பட்டது விக்கிரமா. எவன் அதிகாரமும், சக்தியும் பெற்றிருக்கிறானோ அவனிடம் உள்ள வித்தையைத்தான் அது ஒப்புக்கொண்டு பாராட்டும். அவையிரண்டும் இல்லாத என்னிடம் என்ன வித்தை இருந்து என்ன பயன்? பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா என்றுதான் உலகம் பரிகசிக்கும். அதனால்தான் இந்த மண்டபத்தை இப்படி - இந்தக் கனவுக் காட்சிகள் எப்போது நனவுக் காட்சிகளாகத் தொடங்குமோ அப்போதுதான் இந்த மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்யவேண்டும். குழந்தாய்...

என் காலத்தில் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன் காலத்தி லாவது உனக்குக் கிடைக்க வேண்டு மென்பது என் ஆசை, குழந்தாய்!