பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மு. பரமசிவம் :

&

சிவ

பார்:

பார்:

இல்லை... இல்லை. சோழ சைன்னியத்தில்

ஒருவன் கூடத் திரும்பிப் போகவில்லை. ஒருவன்கூட எதிரியிடம் சரணாகதி அடைய வில்லை.

ஆகா! சோழ நாட்டுக்கு நற்காலம் பிறந்து விட்டது ஸ்வாமி. நற்காலம். எனக்கு ஒரு கைம்மாறும் வேண்டாம் பார்த்திபா. உன்னைப் போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு செய்வதையே தர்மமாகக் கொண்டவன் நான். உன் மனதில் ஏதாவது குறை யிருந்தால் தெரிவி. நிறைவேற்றி வைக்கிறேன். உண்மையாகவா? என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் ஸ்வாமி. எனக்கு ஒரு குறை இருக்கிறது. சோழ நாடு முன்னைப் போல் சுதந்திர நாடாக வேண்டும். மகோன்னத மடைய வேண்டும்.

தூர தூர தேசங்களிலெல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று கனவு கண்டு வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன் காலத்திலாவது அது நனவாக வேண்டு மென்பது தான் என் மனோரதம். விக்கிரமன் வீர மகனாக வேண்டும்.

சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல. சுகம் பெரிதல்ல. மானமும்,