பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நா. பார்த்தசாரதி இழப்பு நமது கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஆக்கிவிட்டோம். பல்கலைக் கழக மட்டத்தில் ஒவ்' வொரு துறைக்கும், பிரிவுக்கும் இந்த டிஸிப்ளின், அந்த டிவிப்ளின் என்று பெயரிடுவதோடு நம் டிஸிப்ளின் முடிந்து விடுகிறது. பொது வாழ்வில் இன்று நிலவும் லஞ்ச ஊழலுக்கான காரணங்களை ஆராய்ந்தால் மூலக் கோளா றுகள் நமது கல்வி முறையில் இருப்பது புலப்படும். படித் தவனிடம்தான் சூது, வாது, வஞ்சகம், ஏமாற்று அதிகம் அதிகம் தென்படுகின்றன. பக்தியினல் வருகிற பயமோ, பயத்தினல் வருகிற பக்தியோ இரண்டுமே இல்லாமல் போய்விட்டன. பக்தி சிரத்தை, பயபக்தி போன்ற சொற். ருெடர்களே நமது கல்வித்துறையின் எல்லாப் பிரிவுகளி லிருந்தும் விலக்கப்பட்டு விட்டனவோ என்று கூடத் தோன்றுகிறது. 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்கிற குறளில் கற்க வேண்டும் என்பதையும் எப்படிக் கற்க வேண்டும் என்பதையும், எதைக் கற்க வேண்டும் என் பதையும், கற்றபின் என்ன செய்ய வேண்டும் என்பதை யும் தெளிவாக வகைப்படுத்திக் கூறியிருக்கிருர் வள்ளுவர். கசடறக் கற்பதற்கும் இன்றைய கல்வி முறையில் இடம் இல்லை. கற்க வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கற்ப்தற் கும் இன்றைய கல்வி முறையில் வழி இல்லை. ஒழுக் கத்தை ஏன் மேற் கொண்டு ஒழுகிப் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு வள்ளுவரே. பதிலும் கூறி விடுகிருர், எல்லா வகைச் சிறப்புக்களை யும் தருவதாக அமைவதல்ை ஒழுக்கத்தை உயிரினும் சிறந் ததாகக் கடைப்பிடித்துப் பாதுகாக்க வேண்டும் என்ருர் அவர். இடையருமற் கடைப்பிடிக்க வேண்டியது என்ற பொருள்படவே ஒழுக்கம் என்ற பெயர் விளங்கு வதைக் காணலாம். ஒழுகுதல் என்ருலே அதில் இடையறவு படாமையும் சேர்த்தே அடங்கும். ஒழுக் கத்தின் முக்கியத்துவத்தை வேறு எத்தனையோ விதத்தில்