பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 98 நா. பார்த்தசாரதி யாத மேன்மையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரிடம் இருந்தது. நம்முடைய பழம்பெரும் நூல்களில் இதற்கான சான்றுகள் பல காணக் கிடைக்கின்றன. பழந்தமிழர் கோயில்கள், அரசர்தம் அரண்மனைகள் கோட்டை கொத்தளங்கள் தனியார் வீடுகள், வீதிகள் நகர் ஒழுங்கு ஆகியவற்றை அமைப்பதில் கலே துணுக்க மும், தனித்தன்மையும் கொண்டிருந்தனர் என்பதை அச் சான்றுகளிலிருந்து நன்கு அறிய முடிகிறது. கடல் கொள் ளப்படுவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இலண்டன் பெருநகரின் அமைப்போடு ஒத்ததாக விளங்கியது என்று வரலாற்றுப் பேரரறிஞர் சதாசிவ பண்டாரத்தார் கருதுகிரு.ர். சுருங்கை, சுரந்துபடை, முன்றில், இடைகழி, அங்க ணம், செய்குன்று முதலிய சொற்ருெடர்கள் பழைய நூல் களில் வழங்குவதிலிருந்து நமது கட்டிடக் கலையின் தொன்மை உய்த்துணரப்பட முடியும். ஒவ்வோர் அரசர் கோட்டை மதிலும் பகைவரிடமிருந்து உட்பகுதியைப் பாதுகாக்கும் பொறியியல் நுணுக்கங்களைக் கொண்டிருந் தன என்பதைப் பல நூல்கள் பலபட விரித்துப் பேசுகின் றன. சிலப்பதிகார மதுரைக் காண்டத்தில் கூடல் நகர மதிலமைப்பு இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி நூலிலும் இவ்விவரங்கள் கூறப்படுகின்றன. கட்டிடக்கலை நுணுக்கங்களைச் சோதிட நூலுடன் தொடர்புபடுத்தி விவரிக்கும் மனையடி சாத்திரம்' என்ற நூலும் வழக்கில் உள்ளது கருவறை, அருத்த மண்டபம், மகா மண்டபம், விமானம், கோபுரம், கொடிமரம், என்று கோயில்கட்டும் நிலைகள் பற்றித் தனியான கட்டிடக்கலை ஒழுங்குகளை ஏற்படுத்தியுள்ளனர். திண்ணை, உள்வீடு, மாடம், மாடப்பிறை, விளக்குமாடம், என்று வீடுகள், இல்லங்கள் தொடர்புடைய கட்டிடக்கலைப் பெயர்களும் வழக்கில் உள்ளன. -