பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் 99 இப்போது இலண்டன், பாரிசு நகரங்களில் நிலத்தடிப் பாதை, நிலத்தடி இரயில்வழி உள்ளதுபோல் சிலப்பதி காரக் காலத்து மதுரையில் நிலத்துட்பாதை' இருந்ததை அறிய முடிகிறது. “இளை சூழ் மிளையோடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில் பெருங்கை யானை இளநிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கிற் போகிக்...' என்னும் பகுதியில் சுருங்கைவீதி என்பதற்கு நிலத்துட் பாதை (Sub-way) என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இப்போது சென்னை, பம்பாய் போன்ற பெருநகரங்களில் பல பெரு வழிகளில் இப்படி நிலத்துட்பாதை அமைந் திருப்பதைக் காண்கிருேம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நெடுந்தொலைவு நிலத்துட்பாதை அமைக் கும் திறன் பெற்றிருந்ததை அறிகிருேம். நாளங்காடி, அல்லங்காடி, அகநகர், புறநகர், பட்டி னப்பாக்சம், மருவூர்ப்பாக்கம், சதுக்கம், சந்தி, இள மரக்கா, போன்ற நகரப்பிரிவுகளும், பெயர்களும் கூடத் தமிழர்தம் நகரமைப்புக் கலையின் அடையாளப் பெயர்க grrrr3G6u sarrät{5stgör past. g)air pl City, Contonement, 'Suburban, 0utskirt-என்றெல்லாம் ஆங்கிலத்தில் வழங் கும் பெயர்களுக்கு இணையான நகர், புறநகர், புறஞ்சேரி என்ற சொற்களும், நோக்கத்தக்கன. "கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு, ஆங்கு ஆயிரம் கண்ணுேன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன மதிலக வரைப்பில்’’ என்ற வரிகள் மூலம் இந்திரனுடைய நகைப் பெட்டியைத் திறந்து காட்டினல் ஒத்த நகரம் என மதுரை நகரின் பீடும்