பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறையோன் கூறிய மதுரை வழி சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கோவ லற்குக் கூறிய வழியின் இயல்பை விளக்கினல் முதல் இலக்கிய வழிகாட்டியை அறியலாம். கோவலனும் கண்ணகியும், கவுந்தியடிகளும் உறையூரினின்றும் புறப் பட்டு மதுரை நோக்கிச் செல்லுகையில் பாண்டிய நாட்ட கத்தே புக்கு ஆங்கு ஊரிடையிட்ட காடுபல கண்டு செல்லு கையில் கந்தன்பள்ளி என்னும் அருகக் கடவுள் கோயிலில் தங்கி மறுநாள் காலையில் மேற்கொண்டு தென்திசையில், மதுரை நோக்கிச் செல்லத் தொடங்கித் தொடர்கையில் நண்பகலின் வெயில் மிகுதி பொறுக்காமல் இடைவழியில் ஓர் இளமரக்காவில் தங்கினர். அப்போது தென்திசையி லிருந்து வடதிசைச் செலவை மேற்கொண்ட மாங்காட்டு மறையோன் என்ற ஒர் அந்தணன் தோன்றிப் பாண்டிய நாட்டையும் பாண்டிய மன்னனையும் வாயார வாழ்த்திய வண்ணமிருந்தான். அவ்வாறு வாழ்த்திய வண்ணம் இருந்த மாங்காட்டு மறையோனை அணுகிக் கோவலன் 'யாது தும் ஊர்?' என வினவ, யான் குடமலைமாங்காட் டுள்ளேன். திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணமும் திருவேங்கட மலையில் திருமால் நின்ற வண்ணமும் காணிய' வந்தேன்' என்ருன் அம்மறையோன். * - " - உடனேகோவலன், மாமறை முதல்வனே! மதுரைக் குச் செல்லும் செம்மையான வழியை எனக்குக் கூறி