பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறையோன் கூறிய மதுரை வழி - 103 யருள்க'-என்று அவ்வந்தணனை வேண்டிடவே அவ்வந்த ணன் பின்வருமாறு மதுரைக்குச் செல்லும் வழித்திறம் கூறலாஞன். நடுவு நிலையிற்பிறழ்ந்து உள்ளங்கொடிய அமைச்சர் முதலிய அரசியல் தொழிலாளரோடே கூடி; கொற்றவன் நாள்தோறும் நாடி முறை செய்யாது கோல் கோட நிற்றலாலே அரசியலே இழந்து கேடு எய்திய அகன்ற நிலத்தைப் போலே தனக்குரிய அறுவகை அமைச் சர்களுக்குள்ளே (ஆறுபருவம்) முதுவேனில் என்னும் கொடிய அமைச்சனேடு கூடிக்கொண்டு வெவ்விய ஒளியை யுடைய ஞாயிறு என்னும் வேந்தனைவன் பண்டுதான் செய்த நலங்களைத்தானே அழித்தலாலே முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தமக்குரிய பண்புகள் குறையப்பெற்றுத் தம்மிடம் உயிர்வாழும் உயிர்கட்குத்தாம் வழங்கும் முறை மையை உடைய நலங்களை வழங்காமல் மாறுபட்டு அஞ்சி நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தை மிகுவித்துப் பாலை நிலம் என்பதோர் படிவத்தை மேற்கொள்ளும் இக் கொடிய முதுவேனிற்காலத்திலே மெல்லியலாளோடு மது ரைக்குப் புறப்பட்டுப் போக வந்திருக்கிறீர் அல்லவா? பாறையும் துறுகலும் அரிய வழிமயக்கமும், பேய்த்தேரு' மாகிய இவை யான் கூறிய முறையாலே கிடக்கிற இந்த நீண்ட் பாலை நிலப்பரப்பில் செல்லும் தொலையாத வழியை நடந்து தொலைத்து அதற்கு அப்பாற் செல்லுவீராயின் ஆங்கு எதிர்ப்படுகின்ற கொடும்பாளுர், நெடுங்குளம் என் னும் இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இருக்கும் கோட்டகத் துட் புகுந்து சிவபெருமானின் திருக்கையில் இருக்கும் திரி சூலத்தைப் போன்று அவ்வழி முக்கூருகப் பிரிவதைக் காண்பீர்கள். - அந்த மூன்று வழிகளிலே வலப்பக்கத்து வழியிற் செல். லக் கருதுவீராயின் விரிந்த தலையினை உடைய வெண்கடம் பும், உலர்ந்த தலையினையுடைய ஒமையும், தண்டு வறண்டு, வற்றிய மூங்கிலும் நீரின்றிக் கரிந்து கிடக்கிற மரல்களும் உழ்ைமான் கரிந்த் அம்மரற் புல்லைத் தின்று பின்னர் நீர் பருக விரும்பி யாண்டும் திரிந்து பார்த்தும் நீர்பெற,