பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - கள். பார்த்தசாரதி இருத்தி அங்கிருந்து எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய மதுரைக்குச் செல்லுங்கள்'-என்று மாங் காட்டு மறையோன் கூறி அந்த வலப்பக்கத்து வழிமேல் நீயிற் போக நினைக்காவிடில் நடுவிலுள்ளது. செந்நெறியா கும். இனிய சோலைகளால் சூழப்பட்ட ஊர்கள் பல இந்த இடைவழியில் உள்ளன. காடுகள் பல கடந்து சென்ருல் நடுவழியில் வழிப் போக்கரைத் துன்புறுத்தும் தெய்வம் ஒன்றுண்டு. அது அச்சுறுத்தல் செய்யாது. வழிப் போக் கர்க்கு அச்சம் தோன்ருதபடி தோன்றுதலோடு மயக்கும். அதற்கு மயங்காமல் அப்பாற் செல்லின் மதுரைக்குச் செல்லும் பெருவழி தென்படும்.’’-என்று முடித்தான். மாங்காட்டு மறையோன் கோவலனுக்குக் கூறிய விரிவான வழித்திறம் இது ஆகும். இதைக் கூறிவிட்டுத் திருமாலின் திருவடி. தொழ நான் என் பயணம் தொடர்கிறேன்'என உரைத்து அவர்களிடம் விடை கொண்டான் மறை யோன், - -