பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமும் கல்வியும் -9 வற்புறுத்திச் சொல்லியிருக்க முடியும் என்ருலும் வள்ளு வர் அதனை உயிரினும் என்று ஏன் சிறப்பித்தார்? போற் றிப் பாதுகாப்பதில் இழந்தால் மீண்டும் பெற முடியாத தில் உயிரை விடச் சிறந்த ஒன்று உலகிலேயே இல்லை என் பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் உயிரை விடச் சிறந்த ஏதோ ஒன்று இருப்பது போல் பாவித்து 'உயிரினும் ஒம்பப்படும்' என்கிருரே வள்ளுவர்? உயிரைப் போல’ என்று சொல்லியிருந்தாலே போதுமானதாயிருக் கும். ஆல்ை உயிரை விடவும் மேலானதாக ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சற்று மிகையாகவே ஒழுக்கத் தின் அவசியத்தை வற்புறுத்திச் சொல்லியுள்ளார். உயிர் இடையருத ஒன்று. சிறிது நேரமில்லாமற் போய்ப் பின்பு மீண்டும் அதே உடலில் வரக் கூடியதில்லை. அதைப் போலவே ஒழுக்கமும் இடையருத ஒன்ருக இருக்க வேண்டும். அவ்வப் போது இழந்து அவ்வப்போது மீண் டும் பெறக்கூடியதில்லை ஒழுக்கம் உயிரைப் போல. வள் வர் பாஷையில் உயிரைக் காட்டிலும். , மனிதனுக்கு வரக் கூடிய மேன்மைகள் எல்லாம் கல்வி, புகழ், செல்வம், பதவி எதுவாயினும் அது ஒழுக்கம் சார்ந் திதாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. ஒழுக்கமற்ற கல்வி, ஒழுக்கமற்ற புகழ், ஒழுக்கமற்ற செல் வம் ஒழுக்கமற்ற பதவி, ஒழுக்கமற்ற வீரம், எதுவுமே ஆகாது என்று உறுதியாக அழுத்தந்திருத்தமாய்ச் சொல் கிருர் வள்ளுவர். . c. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்ம்ை என்பது வள்ளுவர் கற்று. இன்று சமூகத்தில் பலர் பல்வேறு நிலைகளில் அடை யக் கூடிய அடைய முடிந்த மேன்மைகள் அனைத்துக்கும் இழுக்கம் என்ற ஓர் அடிப்படையே தேவையில்லை என்ற நிலையைக் காண்கிருேம். இந்த ஒழுக்க வீழ்ச்சியின் அடிப் படை கல்வியிலிருந்தே தொடங்கப்பட்டுவிடுகிறது. இளைஞர்களுக்கு ஒழுக்கத்தோடு கூடிய கல்வி போதனையை