பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108. நா. பார்த்தசாரதி சோலே ஒன்றில் கண்ணகியோடு புகுந்து அங்குத் தவ ஒழுக்கமாகிய சிறைக் கோட்டத்தினுள் அடங்கியிருந்த கவுந்தியடிகளைக் கண்டு வணங்கிய போது கவுந்தியடிகளே மேன்மக்களாகிய நீவிர் உறுகளுளரின் கடைகழிந்து இங்ங்ணம் தீவினையாளர் போன்று நுங்கள் இல்லறந் துறந்து இவ்வாறு வருவதற்குக் காரணம்தான் யாதோ ?” என்று வினவுகிரு.ர். - அதற்குப் பொருள் வேட்கையால் மதுரை மூதூர் செல்கிறேன்.' என்று மறுமொழி கூறுகிருன் கோவலன். அதையறிந்த கவுந்தியடிகள், கண்ணகியைக் கூர்ந்து நோக்கி "இவளுடைய மெல்லிய சிறிய அடிகள் வழிநடை யில் பருக்கைக்கற்களாகிய பகை செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டா. மதுரைக்குச் செல்லும் வழியோ என் ருல் செல்லுதற்கரிய காடும் நாடும் இடையிட்ட வழியா கும். இவளுடைய நிலைமையைப் பார்த்தால் அந்த வழியைக் கடத்தற்கு அரியவளாகத் தெரிகிருள். இதைக் காரணமாகச் சொல்லி உங்கள் பிரயாணத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் கூறிலுைம் நீங்கள் கேட்க மாட்டீர்களென்று தோன்றுகிறது. வாலறிவனகிய தீது தீர் இறைவனை வழிபடற் பொருட்டு யானே மதுரை செல் லும் கருத்துடையேனுக இருக்கிறேன். நானும் உங்களோடு வருகிறேன். போகலாம். வாருங்கள்! என்று கூறிய கவுந் தியடிகளும் அவர்களோடு சேர்ந்து புறப்ப்ட்டார் என்ப தாக இந்தப் பயணம் ஆரம்பமாகிறது. கண்ணகியும் கோவலனுமே தனியாக இப்பயணத்தைச் செய்ததாகக் கூறுவதைவிட மூன்ருவது ஒருவர் உடன் பயணப்படுவ தன் மூலம் காப்பியச் சுவையை அதிகமாக்குகிருர் இளங்கோ அடிகள். ... . . . 'அடிகள் நீரே அருளிதிராயின் இத்தொடிவளைத் தோளி - - - - - - - - துயர்தீர்த் தேன்'-என்று கோவலன் உடனே மகிழ்கிருன். எனவே கவுந்தியடிகள் கண்ணகி துயர் தீர்க்