பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'110 நா. பார்த்தசாரதி - துக் கொள்ள இளங்கோவடிகளால் முடிகிறது அந்தப் பாத்திரத்தைக் கல்வி கேள்விகளில் வல்லதொரு துறவியா கப் படைத்ததனுல் அப்பணி பொருத்தமும் தகவும்.உடைய தாகிவிடுகிறது. வழித்துணையாகப் பழகிய சில நாட்களி லேயே கவுந்தியடிகள் கண்ணகியின் குணநலன்களைக் கண்டு பெரிதும் வியப்படைந்து கூறுகிரு.ர். இவ்வகையில் கண்ணகியின் பாத்திரப் பட்ைப்பை விருப்பு வெறுப்பில் லாத நடுநிலையாளராகிய துறவி ஒருவரைப் புகழச் செய்து நிலைநாட்ட இளங்கோவடிகளால் முடிகிறது. இடைக் குலத்து மாதரியிடம் கண்ணகியை அடைக்கலம் அளிக்கும் போது கண்ணகியின் இயல்புகளைப் பலபடக் கூறியபின் கவுந்தியடிகள், 'இன் துணை மகளிர்க் கின்றியமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்' என அறிமுகம் செய்து வைக்கிருர், கவுந்தியடிகள் என்ற பாத்திரம் வந்திராவிடில் இளங்கோவடிகள் கோவலன் மூலமாக இவ்வளவு சிறப்பான அறிமுகத்தைச் செய்: திருக்க முடியாது. கோவலன் இவ்வளவு சிறப்பாகக் கூறினையின் தன் மனைவியைத் தானே புகழ்ந்தான் என்று: ஆகிவிடும். - இந்த நோக்கில் பார்க்கும்போது அறவுரைக் கருத்துக் களைக் கூறவும் கண்ணகி கோவலன் பாத்திரங்களைச் சிறப் பிக்கவும், வழிநடைப் பயணத்துக்குச் சுவையூட்டவும் கவுந்தியடிகள் ஒரு கதாபாத்திரம் என்ற முறையில் பெறும் சரியான இடத்தை இல்வாறு மதிப்பிடலாம். -