பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் சிலப்பதிகாரப் புகார்க் காண்டம், வஞ்சிக் காண்டம், மதுரைக் காண்டம் என்ற மூன்று காண்டங்களுள் அரங்: கேற்று காதை முதற் காண்டமாகிய புகார்க் காண்டத்தில் அமைவதாகும். . . . . . . எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண்ணின்ற கூத்துப் பதினென்றும், மண்ணின் மேல். போக்கிய பூம்புகார்ப் பொற்ருெடி மாதவியின் நடன. அரங்கேற்றத்தைப் பற்றிக் கூறுகிற காதை இது. ~ -. கதை பற்றிப் பாடுகிற காப்பியப் புலவன், கதையைச் செறிவாக்கி, அதில் வரும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் பாத், திரங்கள் மூலமாகவும் மனித உணர்ச்சிகளை மீட்ட வேண் டுமேயல்லாது, ஒரு செய்தித்தாளில் தருவது போலப் பல் வேறு தரப்பட்ட செய்திகளையும் தொகுத்தும் பட்டியலிட் டும் தருதல் தகாதுதான். அத்தகைய போக்கு இக்காதை யில் பொதுவாகக் காணப்படினும், அவ்விதம் தொகுப்பதி" லும் பட்டியலிடுவதிலும் கூட ஒர் இலக்கிய நயத்தை ஆசிரி யர் சேர்த்துவிடுகிருர் என்பதே இளங்கோவடிகளின் பெருமையாகும். - ... காதையின் தனிச் சிறப்புக்கள் * . . . . . . . ... . மற்றக் காதைகளுக்கில்லாத சில தனித்த o சிறப்புக் கூறுகள் இக் காதைக்கு உண்டு. சிலப்பதிகாரம் முழுமை.