பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் 145. புராணச் செய்தி புராணச் செய்தியொன்றும் இக்காதையில் கூறப்பட் டுள்ளது. உருப்பசி என்பவள் வானுலகத்து நடன மாது. அவள் ஒருக்கால் நடனமாடுகையில் இந்திரன் மகன் சயந்தன் மேல் கண்வைத்தாளாகி நடனம் பிறழ்ந்தாள். இது கண்டு வெகுண்ட அகத்தியன் அவளேயும் சயந்தனையும் மண்ணுலகில் பிறக்குமாறு சபித்தனன். மண்ணுலகில் பிறந்த உருப்பசி நடன அரங்காகிய தலைக்கோல் தானத் தில் சாப நீக்கம் பெற்றுப் பின்னர் விண்ணகம் சென்றெய் தினள். மண்ணுலகில் அவள் வந்து வாழ்ந்த மரபில் ஒருத்தி யாய் மாதவி தோன்றினள் என்பர் இளங்கோ. மாதவி .யின் முன்னேர் ஊர்வசி மரபினர் எனக் கூறப்படுவதால் மாதவியின் சிறப்பு மேம்படுத்தப்படுகிறது. 'தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவைெடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பில் குன்ருச் செய்கையொடு பொருந்திய பிறப்பில் குன்ருப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி என்ற வரிகளில் இக்கதை மிளிரக் காணலாம். இதே, புராணச் செய்தி, மீண்டும் கடலாடு காதை யிலும் வருகிறது. ஒரே செய்தியை இருமுறை கூறுவது. மாதவியின் மரபுச் சிறப்பை விரித்துக் கூற வேண்டும் எனக் கருதி ஆசிரியர் கையாண்ட உத்தியாகலாம். விச்சாதரன் தன் காதலிக்கு விளம்புகிற பகுதியுள் மீண்டும் இக்கதை கூறப்பட்டுள்ளது. கடலாடு காதையின்