பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் 117 ஒருதலை யின்றி இருவர் நெஞ்சினும் காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை மான விறலோய் வேணு வாகென விட்ட சாபம் பட்ட சயந்தன் சாப விடையருள் தவத்தோய் நீயென மேவினன் பணிந்து மேதக வுரைப்ப ஒடிய சாபத்து உருப்பசி தலைக்கட்டும் காலை கழையு நீயே யாகி மலையமால் வரையில் வந்துகண் ணுற்றுத் தலையரங் கேறிச் சார்தி யென்றவன் கலக நாரதன் கைக் கொள் வீணை அலகில் அம்பண மாகெனச் சபித்து...' இச் செய்யுளையும் நோக்கி, சிலப்பதிகாரத்துள் இரண்டு முறை இச்செய்யுள் கூறும் கதை வருவதையும் நோக்கில்ை, உருப்பசி குலத்தில் வந்தவள் மாதவி என்ற கதை பண்டு தொட்டு வழங்கி வந்த கதையாய் இருக்க வேண்டும் என்பது தெளிவு. வானவர்களைத் தங்கள் குல முதல்வர்களாகக் கூறிக் கொள்கிற பழக்கம் பண்டு தொட்டு வருவதாகும். பாண்டியன் திங்களே முதல்வகைக் கொண்டான். சோழன் செஞ்ஞாயிற்றைத் தன் முதல்வ் கைக் கொண்டான். இராமன் ஆதவன் மரபில்ே வந்த வன். இராவணன் நான்முகன் வழியைச் சார்ந்தவன். தருமன் திங்கள் குலத்தில் தோன்றியவன். - - இப்பேரரசர்களின் மரபு வழித் தோற்றத்திற்கெல் லாம் மாதவி மரபைக் கூறுவதைப் போன்ற கதைகள் இல்லை. மாமலர் நெடுங்கண் மாதவியின் ஆடல் திறம்ை பாடல் இனிமை, அழகின் தன்மை இவைகளை மட்டு: உயர்த்திக் கூற வேண்டும் என்று கருதியிருந்தால் இளங்கோ அவளே ஊர்வசி மரபினள் என மட்டும் குறித் திருக்கலாம். அவ்வாறு மட்டும் கூருமல், ஊர்வசியின் சாப விமோசனக் கதையையும் அரங்கேற்று காதையில்ே கூறுவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும்.