பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f O நா. பார்த்தசாரதி உறுதிப்படுத்தாவிட்டால் அதோகதிதான். எதையும் மதிக்காத எதையும் பொருட்படுத்தாத தடித்தனம் இன்று பெருகுவதற்கு ஒழுக்கத்தைத் தனிப்படுத்திப் பிரித்து விட்ட இந்த வறட்டுக் கல்வியே காரணம் என்பதை இன் னும் புரிந்து கொள்ளாமலிருப்பது விந்தையே. புரிந்து கொள்ளவில்லை என்பதைவிடப் புரிந்து கொள்ள மறுத்துக் கொண்டிருக்கிருேம் என்பதுதான் சரி என்று படுகிறது. 'அரி ஓம்’-எனறு திண்ணையில் பரப்பிய மணவில் விரல் தேய எழுதிப் பழகியகாலத்துக் கல்வியிலிருந்த வலிமையும் அழுத்தமும் இன்று இல்லாமற் போய் விட்டதே! மாதா பிதா குரு தெய்வம் என்று புகழ்ந்து தாயோடும், தந்தை யோடும் சேர்த்துக் கல்வி கற்பிக்கிற ஆசானையும் எண்ணி மதித்த காலம் எங்கே? தாய், தந்தை, குரு யாரையுமே மதிக்காத இந்நாளையக் கல்வி எங்கே? - நம் தேசம் விடுதலை பெற்றுவிட்டது உண்மைதான்: ஆளுல் கல்வி இன்னும் விடுதலை பெறவில்லை. அது பல வகைகளிலும் பல மோசமான விஷயங்களுக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறது. ஒழுக்கமற்ற கல்வியில் உருவாகும் பலர் பின்ளிைல் தாமே மற்றவர்களுக்குக் கற்பிக்கும் ஆசி ரியர்களாகவும் ஆகிவிடுகிருர்கள். இந்த நச்சுச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் தரம் தேயவும் குறையவுமே வழிபிறக் கின்றது. கல்விக் கூடங்களில் நுழையவே லஞ்சம் தேவைப் படும்போது அங்கிருந்து வெளியேறுகிற யாரும் தூய்மை யானவராக வெளியேற வழியில்லை. கல்வியும், கல்விக் கூடங்களும் கற்பிப்பவர்களும், கல்வி முறைகளுமே, முறை கேடுகளின் இருப்பிடமாகிவிட்ட பின் அப்படிப்பட்ட சூழ் நிலையிலிருந்து ஒழுக்கமுள்ள கல்வியோ, ஒழுக்கமுள்ள கல் வியாளர்களோ உருவாக்கப்பட முடியுமா என்ற சந்தே கமே அதிகமாயிருக்கிறது. ஒழுக்கமில்லாத கல்வி உயிரற்ற கல்வி என்ற உணர்வு வரவேண்டும். பக்தி காரணமாக உருவான ஒழுக்கத்தையும் வளரவிடாமல் செய்துவிட்டுக் கல்வியையும் ஒழுக்கமற்றதாகச் செய்துவிட்டால் எதிர் காலம் என்ன ஆகும் என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்