பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - - - கா. பார்த்தசாரதி இளங்கோவடிகளும் குழலாசிரியனின் அமைதியை விளக் கிப் பேசுகிரு.ர். - ...’ - இசை நூல்களில்சொல்லப்பட்ட முறைமையானே சித் திரம் புணர்ப்பும் வஞ்சனப் புணர்ப்பும் என்று சொல்லப் பட்ட இரண்டு கூற்றுக்களையும் குழல் வழிச் செல்லும் குழ லாசிரியன் அறிந்திருக்க வேண்டும் என்கிருர் யாழாசிரியன் அமைதி - குழல் வழி நின்றது யாழே எனக் குழலுக்கு அடுத் தாற்போல் யாழையும் சொல்வது தமிழ் மரபு. குழலாசிரி பனின் அமைதியைச் சொன்ன இளங்கோ அடுத்ததாக நாடக அரங்கை, முக்கியப் பங்கேற்று,இயக்குகின்ற யாழா சிரியன் அமைதியையும் தெரிவிக்கிரு.ர். 'ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஒரேழ் பாலை நிறுத்தல் வேண்டி’ - என்னும் வரிகளில் செம்பாலை முதலிய ஏழு பண்களை யும் நிறுத்த வல்லவனுக யாழாசிரியன் திகழ்தல் வேண்டும். என்ற கருத்துக் கூறப்பட்டுள்ளது. தாரத் தாக்கம், இசை திரிந்த வழிப் பாலைகள் திரிதல், இணை நரம்பும் இயக்கும் மரபும் ஆகிய அனைத்தையும் யாழாசிரியனை மையமாக வைத்து விளக்கமுறக் கூறப்பட்டுள்ளன. - - அரங்கின் அமைதி - நாடக அரங்கு எவ்விதம் அமைய வேண்டும் என்ற செய்தியும்விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடகக் கலையில் அரங்கமைத்தல் என்பது ஒரு தனித் துணைக் கலையாகும். மிகச் சரியான அளவுகள் கொண்டு நாடக அரங்கம் அமைக்கப் படாவிடில் அதன் முழுப்பயனும் சுவைஞர்க் குக் கிட்டாது போய்விடும். தூண்,உத்தரப்பலகை முதலிய வற்றினுடைய நீள அகலங்களையும் அளவெடுத்துக் கூறி யிருப்பது இளங்கோ அடிகளின் நுண்மாண்நுழை புலனை நன்கு விளக்குவதாகும். . . . . . .