பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் ഷിul@l செய்திகள் 124 தலைக்கோல் அமைதி தலைக்கோல் எவ்விதம் யானையின் பிடரிமிசை ஏற்றப் பட்டது தெருவீதி வலம் செய்யப்பட்டது ஆகிய செய்தி கள் விளக்கமுறப் பேசப்படுகின்றன. வெற்றி கொண்ட மன்னரது வெண்கொற்றக் குடை யின் காம்பையே தலைக் கோலாக நறுக்குவர். அதனை இந் திரன் மகன் சயந்தன் ஆகுக' என்று வாழ்த்துவர் காவிரி யாற்றின் நீர்கொண்டு அத்தலைக்கோலை நீராட்டிப் பொன் ல்ை செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்து பட்டத்து யானையிடம் அதனை அளிப்பர். வீரமுரசு முதலிய மூன்று முரசுகளும் ஒரு சேர எழுந்து முழங்கவும் இன்னிசைக் கருவிகள் பலவும் ஒருசேர முழங்கவும் அரசனும் அவளுேடு தொடர்புடைய ஐம்பெருங் குழுவும் அப்பட்டத்து யானை யோடும் தேர்வலம் செய்வர். அத்தேர்மிசை நின்ற கவிஞ னின் கையிலே அத் தலைக்கோலை அளிப்பர். அக்கவிஞன் தானும் மன்னர் முதலியோரோடு ஊர்வலம் வந்து அரங்கி னுட் புகுந்து அத் தலைக்கோலை எதிர்முகமாக வைப்பான். பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு கண்ணிட்ை நவமணி ஒழுக்கி மண்ணிய நாவலம் பொலந்தகட்டு இடைநிலம் போக்கி காவல் வெண்குடை மன்னவன் கோயில் - இந்திர சிறுவன் சயந்தன் ஆகென வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்' என்று தலைக்கோவின் பெருமை கூறப்படுகிறது. தலைக் கோல் நாடக அரங்கிற்குக் கொண்டு செல்லும் மரபும் இலக்கிய நயம் மிளிர விளக்கமுறப் பேசப்படுகிறது. 'புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணிய பின்னர் மாலை யணிந்து நலந்தரு நாளால் பொலம்பூண் ஒடை