பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கா. பார்த்தசாரதி அவன் மாதவியால் கொண்ட நேசத்தின் ஆழத்தை நன்கு புலப்படுத்துவதாகும். - 'வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்தென்' என ஆசிரியர் கோவலன் கண்ணகியை மறந்ததையும் குறித்துச் செல்வர். வெண்பா - - - - - இறுதியில் அமைந்துள்ள வெண்பா காதையின்கதைப் பகுதி முழுவதையும் குறிப்பதாய் அமையவில்லை. மாதவி அரங்கேறிஞள் என்பது மட்டுமே அதில் குறிக்கப் பெற்றுள்ளது. - எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண் நான்கும் பண்ணின்ற கூத்தும் பதினென்றும்-மண்ணின்மேல் போக்கிளுள் பூம்புகார்ப் பொற்ருெடி மாதஸ்தன் வாக்கினல் ஆடரங்கில் வந்து. சிலப்பதிகாரக் காப்பியமெங்கும் காணப்படுகிற காதை இறுதி வெண்பாக்கள், கதையின் சாரத்தைக் கூறு வனவாகவே எங்கும் அமைந்துள்ளன. அதையொட்டி நோக்கும் போது இக்காதையின் முக்கியக் கதைப் பகுதி மாதவியின் அரங்கேற்றம் மட்டுமே எனவும் துணிய இடமுண்டு. : - அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகளுள் பழந்தமிழர் தம் பண்பாடும் நாகரிகமும் அன்னேரின் இசை, நாடகப் புலமைத் திறமும் மிகவும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் எனலாம். சிலப்பதிகாரக் காதைகளுள் மிகப் பெரிதும் குறிப்பிடத்தக்கதும் இன்றியமையாதது மான காதையே அரங்கேற்று காதையாகத்தான் இருக்கும்.