பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நா. பார்த்தசாரதி பெருகிய தவத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில் அருமறைச் சைவம் ஒங்க அருளினுல் அவ தரித்த மருவிய தவத்தால் மிக்க வளம்பதி, வாய்மை குன்ருத் திருமறை யவர்கள் நீடும் திருநாவ லூாாம் அன்றே. இத் திருநாவலூருக்கு ஒரு மிகப் பெரிய பெருமை உண்டு. சடையருைக்கும் இசை ஞானியாருக்கும் மகனக வந்து நம்பியாரூரர் திருஅவதாரம் செய்தது.இவ்வூரிலேயே யாம். - மணம்வந்தபுத்துர் : நம்பியாரூரருக்கு மணம் நிகழ்ந்தது புத்தூரிலாகும். சடங்கவி என்பாரது மகள் ஆரூரருக்குரிய மணமகள்ாகத் தேர்வு செய்யப்படுகிருள். அவளது பெயர் குறிக்கப்பட வில்லை. சடங்கவி பேதை என அவள் அழைக்கப்படு கிருள். சடங்கவி பேதைக்கும் நம்பியாரூரருக்கும் மணம் நிகழும் திருத்தலமாக மாறிய காரணத்தால் புத்துாரின் பெயரும் மாறி விடுகிறது. அது மணம் வந்த புத்துனர்" என்றே அழைக்கப்படுகிறது. 'நெருங்கு துாரியங்கள் ஏங்க நிரைத்த சா மரைகள் ஒங்கப் பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்குபூங் கொடிகள் ஆட அருங்கடி மணம்வந் தெய்த அன்றுதொட் டென்றும் அன்பில் வருங்குல மறையோர் புத்துார் மணம்வந்த புத்து ராமால்' - என்ற பாடல் இக்கருத்தை விளக்கக் காணலாம். ஊர்ப் பெயரால் ஆரூரர் குறிக்கப் படுதல் : ஆரூரருடைய ஊராகிய திருநாவலூரால் ஆரூரர் குறிக்கப்படுதல் ஒரு தனிச் சிறப்பு. இது ஊரு க்கும் பெருமை சேர்ப்பதாகும். . .