பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமும் கல்வியும் 11. டாமா? ஒழுக்கமற்ற ஏட்டுக் கல்வி என்பது அஸ்திவார மில்லாத கட்டிடத்திற்குச் சமமானதாகும். அஸ்திவார மில்லாத கட்டிடம் நீடித்து நிற்கவே முடியாது. ஒழுக்கத் தின் எய்துவர் மேன்மை'-என்று கூறிய கையோடு அதே வள்ளுவர், இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி'-என் றும் கூறியிருக்கிருர். அப்படிப்பட்டபழி நிறைந்த ஞானம் அல்லது பழுதுள்ள கல்வியையா நாம் இளைஞர்களுக்குத் தரப் போகிருேம்? என்ற கேள்வி எழுகிறது. இளைஞர் களுக்கு ஒழுக்கத்தோடு கூடிய கல்வியைச் சத்துணவாக ஊட்ட வேண்டும். அவர்கள் கற்ற கல்வி அவர்களைத் தவறு செய்யவோ வழி பிசகிச் செல்லவோ தூண்டாத தாக இருந்து கட்டுப்படுத்த வேண்டும். ஒழுக்கமற்ற கல்வி அப்படி நிலை நிறுத்தும் சக்தியற்றது என்பதல்ை அதை வைத்துக் கொண்டு உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. நல்லது செய்யவும், நன்னெறியில் நிற்கவும் துணைபுரியக்கூடிய கல்விதான் தேவை. தீயது செய்வதைத் தடுக்கவும் தீமைகளே எதிர்க்கவும் உதவக் கூடிய கல்விதான் தேவை. தீமைகள் புரியத் தூண்டக் கூடியது கல்வியே இல்லை. எதிர் மறையான கற்பித்தல் ஒழுக்கம் சார்ந்ததாக இருக்க முடியாது. ஒழுக்கம் கல்வி யில் உடன்பட்ட உட்பட்ட ஒர் அம்சமாகும். இந்தியக் கல்வி ஞானத்தின் மூலபலமே ஒழுக்கம்தான்.