பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 123; வேதியன் அதனைக்கேட்டு வெண்ணெய் நல்லூரி லேநீ போதினும் நன்று மற்றப் புனிதநான் மறையோர் முன்னர் ஆதியில் மூல ஓலை - காட்டிநீ அடிமையாதல் சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்ருன். மீண்டும், இவ்விருவரும் வெண்ணெய் நல்லூரை தண்ணி னர் எனக் கூறி ஊரின் பெயர் தெளிவாகச் சுட்டப்படு: கிறது. . செல்லுநான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தம் சேர்ந்த வல்விரும் பணையுமா போல் வளளலுங் கடிது சென்ருன் எல்லையில் சுற்றத் தாரும் - இதுஎன்னும் என்று செல்ல நல்ல.அந் தணர்கள் வாழும் வெண்ணெய்நல் லூரை நண்ணி வெண்ணெய் நல்லூர் மறையவர்களிடம் ஆவணத்தைக் காட்டும் போது, அந்த ஆவணத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தில், வெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என் மரபுகளோரும் வழித் தொண்டு செய்தற்கென். எழுத்து எனக் கூறுமிடத்தில், மற்ருெருமுறை வெண் ணெய்நல்லூரின் பெயர் கூறிச் சுட்டப்படுகிறது. அருமறை நாவல் ஆதி . சைவன் ஆரூரன் செய்கை பெருமுனரி வெண்ணெய்கல்லூர்ப் பித்தனுக் கியானும் என்பால் வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோல