பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 135 தாம் பிறந்தருளும் பேறுபெற்ற பதி அது. பிள்ளையார் திருவவதாரம் செய்த பதி, இதனை நான் மிதியேன்” என்று ஊரெல்லைப்புறம் வணங்கி ஆரூரர் வலம் வந்த பதி இது. புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர் அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்தாம் பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகில் சிறந்தபுகழ்க் கழுமலமாம் - திருப்பதியைச் சென்றணைந்தார்' என இக் கழுமலம் என்ற திருத்தலம் பல்வேறு அடை மொழிகளுடன் புகழப்பட்டுள்ளது. . . திருக்கோலக்கா: பின்னர் திருக்கோலக்கா என்னும் ஊரை நாடிச் செல் கிருர் ஆரூரர். அங்கும் செந்தமிழ் மாலைகள் பாடுகிரு.ர். இருக்கோலம் இடும்பெருமான் : ; எதிர் நின்றும் எழுந்தருள வெருக்கோளுற் றது.நீங்க ஆரூர்மேல் செலவிரும்பிப் ... ." பெருக்கோதஞ் சூழ் புறவப் பெரும்பதியை வணங்கிப் போய்த் திருக்கோலக் கா வணங்கிச் செந்தமிழ் மாலைகள் பாடி... . திருப்புன்கூர் : திருக்கோலக்காவிற்கு அடுத்துக் குறிக்கப்படும் ஊர். திருப்புன்கூர் ஆகும். அங்கும் சென்று தமிழ் பாடிஞர் ஆரூரர் என்னும் கருத்து தடுத்தாட்கொண்ட புராணத் தில் குறிக்கப்பட்டுள்ளது. தேர்ைக்கும் மலர் சோலேத்