பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நா. பார்த்தசாரதி திருப்புன்கூர் நம்பர்பால், தன் நெஞ்சில் கொண்ட அன் பால் அடிபணிந்து வணங்கினர் ஆரூரர் என்கிறது ஒரு பாடல். . . . . - தேனுர்க்கும் மலர்ச்சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால் ஆனப்பே ரன்புமிக - அடிபணிந்து தமிழ்பாடி மாளுர்க்கும் கரதலத்தார் மகிழ்ந்த இடம் பலவணங்கிக் கானுர்க்கும் மலர்த்தடஞ்சூழ் காவிரியின் கரையணைந்தார். மயிலாடுதுறை : காவிரியின் நன்னீரில் நீராடிய ஆரூரர் அதன் பிறகு மயிலாடுதுறை சென்று, தாவில் சீர் அம்பர் மா காளத் தின் அடிபணிகிரு.ர். " - " - - - வம்புலா மலர் அலைய மணிகொழித்து வந்திழியும் - பைம்பொன்வார் கரைப்பொன்னிப் பயில் தீர்த்தம் ப்டிந்தாடித் தம்பிரான் மயிலாடு துறை வணங்கித் தாவில்சீர் அம்பர்மா காளத்தின் அமர்ந்த பிரான் அடிபணிந்தார். - மயிலாடுதுறை பற்றிய குறிப்பு இவ்வாறு உள்ளது. திருப்புகலூர் : மின்னர் செஞ்சடை அண்ணலாம் சிவபிரான் T657 - னும் பொன்னர் மேனியுன் விரும்புகிற ஊராகும் திருப்புக லூர். இவ்வூருக்கும் சென்று இறைவனே வழிபட்டுப் பயன் எய்துகிருர் ஆரூரர்.