பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 13.9 பனி நீர் தெளிக்கப்பெற்றும் திருவாரூர் மிகச் சிறந்த முறையில் ஒப்பனை செய்விக்கப்படுகிறது. சோதிமணி வேதிகைகள் து நறுஞ்சாந் தணிநீவிக் கோதில்பொரி பொற்சுண்ணம் குளிர்தரள மணிபரப்பித் தாதிவர்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களும் சமைத்து வீதிகள் நுண் துகள் அடங்க விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்’ பற்பல ஊர்கள் தடுத்த்ாட் கொண்ட புராணத்தில் குறிக்கப்பட்டாலும் அவைகளைப் பொதுவாக இரண்டு வகையாக வகுத்துவிடலாம். . 1. கதையோடு பெரிதும் தொடர்புடைய ஊர்கள். 2. கதைப்போக்கில் மேலெழு ந்தவாரியாக வரும் ஊர்கள். கதையோடு பெரிதும் தொடர்புடைய ஊர்களாகத் திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், மணம் வந்தபுத் துார், தில்லை, திருவாரூர் முதலியவற்றைக் குறிப்பிடலாம். திருநாவலூர் கதைத் தலைவரான ஆரூரர் பிறந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன் உறைந்த ஊர். மணம் வந்த புத்துார் தடுத் தாட் கொள்ளக் காரணமாக இருந்த நிகழ்ச்சியாகிய மணம் நடந்த ஊர். - 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள இறைவனைக் கண்ணுரக்கண்டு ஆரூரர் பாடிப்பரவிய திருத்தலம் தில்லை. திருவாரூர், கமலினி என்னும் பரவையாரை ஆரூரர் கடி - இவை தவிர்த்த பிற ஊர்கள் ஆரூரரது சமயஞ்சார்ந்த வழிப் பயணத்தின் போது அவர் கண்டு தரிசித்த தலங்க ளாக மட்டுமே குறிப்பாக வருகின்றன. #' ... . ....' ...: