பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"42 கா. பார்த்தசாரதி வந்த காலத்தில்) வாக்கியம் முடிவதை அல்லது முடியா ததைப் பொருளுணர்விலிருந்துதான் கண்டுபிடிக்க முடி யும். ஏடுகளில் எழுத்துக்களுக்கு மேற்புள்ளிகள் கூட இடப்பட்டிராது. அச்சுக் கலையின் பாதிப்பிலுைம், மேற் கத்திய தொடர்பிலுைம், தமிழ் இந்தப் புதிய பயன்களை எல்லாம் பெற்றிருக்கிறது. இந்தப் புதிய பயன்களை எல் லாம் எப்படி நாம் ஏற்றுப் பயனடைந்திருக்கிருேமோ அதேபோல் பயனும் அழகும் தருகிற பழைய இலக்கண அம்சங்களையும் விட்டுவிடக் கூடாது. புத்தகத்தை எடுத்தான்’ என்ற வாக்கியத்தில் புத் தகம்-ஐ-எடுத்தான் என்று மூன்று சொற்கள் இணைந்து சேரும்போது புத்தகத்திற்கும் 'ஐ'க்கும் நடுவில் அத்து' என்று ஒரு சாரியைச் சொல் பிறந்து புத்தகத்தை' என்று ஆகி விடுகிறது. இதுதான் வழக்கம். அப்புறம் இதுவே இலக்கண விதியாகவும் நேரப்பட்டு விட்டது. இப்போது சிலர் தமிழைச் சொற்சிக்கனத்தோடும் எழுத்துச் சிக்கனத் தோடும் எழுதுவதாக நினைத்துக் கொண்டு, புத்தகத்தை எடுத்தான்' என்பதை 'புத்தகம்மை எடுத்தான்' என்று எழுதுவதைப் பார்க்கிறேன், இதன்படி எழுதுவதானுல், கீழ்க் கண்டபடி எல்லாமே குழப்பமாகும். சரியான பிரயோகம் தவருண பிரயோகம் படம் பார்த்தான் - அல்லது . படம்மைப் பார்த்தான் படத்தைப் பார்த்தான் - - தீபம் ஏற்றினன் - - அல்லது தீபம்மை ஏற்றினன் தீபத்தை ஏற்றின்ை கோபத்தால் வந்த வினை கோபம்மால் வந்த வினே இன்னும் சிலர் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடிப்ப தாகக் கூறிக்கொண்டு - பொருள் வேற்றும்ை அல்லது அர்த்தபாவத்தைத் தெளிவாக உணர்த்தும் இடைச்சொற் களே நீக்கிவிட்டு எழுதுகின்றனர். அதல்ை வாக்கியங்கள் குழப்பம் அடையும். -