பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் இலக்கியமுமாகும் ! தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒர் இலக்கண நூல்ாகத் தோன்றிலுைம் பல வகையிலும் இலக்கியக் கூறு: பாடுகள் நிறைந்து விளங்குகிறது. தமிழ் மக்களின் காதல், வீரம், கலைகள், மரபுகள், அடிப்படையான இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் தொல்காப்பிய பொருளதில் காரத்திலிருந்தே அறியக் கிடைக்கின்றன. - . அதன் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரு. பகுதிகளையும் முழுமையான இலக்கணத் தன்மை நிறைந்த பகுதிகளாக இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியர்; அவ்வெ. ழுத்துக்கும், சொல்லுக்கும் பயனகிய பொருள் பற்றிக் கூறுங்கால் முழுமையான தமிழ்க் கலைக் களஞ்சியமாகவே அதனை உருவாக்கியிருக்கிருர். வாழ்க்கையின் பதிவேடு. தான் இலக்கியம். அவ்வாறு இலக்காக அமைந்து குறிக்கொளுவச் செய் வனவற்றை இலக்கியம் என்பர் சான்ருேர். அவ்வகையிற். பார்த்தால் களவியல், கற்பியல், உள்பட எல்லா இயல்களி' லும், எல்லாப் பகுதிகளுள்ளும் தமிழர் வாழ்வின் இலக்கு. களும், அவற்றைக் குறிக்கொளலும், முறைப்படுத்தலும் தொல்காப்பியப் பொளாதிகாரம் முழுவதும் நிரம்பியிருக் கின்றன. புவியியல் கூறுபாடுகள், உளவியல் கூறுபாடு கள், தலைவன், தலைவி, பரத்தை, பாங்கன், பாங்கி, அறி வர், இருமுதுகுரவர், என்றெல்லாம் பாத்திரங்கள், அவர்