பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் இயக்கியமுமாகும் 21. கள் கூற்று நிகழுமிடம், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபியல் இவைகள் எல்லாம் பொருளதிகாரத்தில் இடம் பெறுகின்றன. - அகத்திணையியல்: ஐந்தினை கூறிய தொல்காப்பியர் அவற்றிற்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் கூறும் போது தாவர நூலியல், விலங்கு நூலியல், புவியி யல் ஆகிய தன்மைகளை நுணுக்கமாக விளக்குகிரு.ர். தலை வர், வினவலர், பரத்தை, அடியோர் ஆகியோரின் காத லியல்புகளும் இலக்கிய நயம்படக் கூறப்படுகின்றன. எந்த எந்தப் பொழுது எந்த எந்தத் திணைக்குரியது என்று கூறும் போதும் மனத்தத்துவ இயல்பு தெரிகிறது. தூதுபற்றியும் வகைகள் பற்றியும் கூறப்படுகிறது. உடன் போக்கு, நற். ருய் புலம்பல், அறத்தொடு நிற்றல் போன்ற கூற்றுக்கள் இலக்கிய நயம் மிக்கவை. பாத்திரங்கள் (தலைவன் தலைவி முதலியோர்) கூற்றுக்கள், செயல்கள், இரவுக்குறி, பகற் குறி, உள்ளுறை உவமம், ஏனை உவமம், இறைச்சி என அகத்தினை ஒழுக்கம் இலக்கியமாகவே விவரிக்கப்படுகிறது. மடலேறுதலும் காமம் மிக்க கழிபடர் கிளவியும், தெய் வம் என்னும் கருப் பொருளே உள்ளுறையுவமத்துக்கு ஆகாதென விலக்குதலும், அகனேந்திணையிற்சுட்டி ஒருவர் பெயர் கொள்ளக் கூடாது' என்றுரைப்பதும் இலக்கியத் தன்மை சுட்டுவன. - - புறத்திணையியல்:- அகத்திணையியல் எவ்வாறு காதல் இலக்கியமாக விளங்குகிறதோ அவ்வாறே புறத்திணை யியல் வீர இலக்கியமாக விளங்குகிறது. அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் உள்ளங்கையும், புறங்கையும் போல்வன என்பது விளங்க அகத்திணை ஏழுக்கும் புறளுகப் புறத் திணைகள் ஏழும் கூறப்படுகின்றன. படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி-என்று தொடங்கிப் படிப்படியாகப் போர்முறை விவரிக்கப்படுகிறது. அடையாளப் பூக்கள் கூறும் முறை இலக்கிய அழகைக் காட்டுகிறது. நிரை கோடல், நிரைமீட்டல், மதிலக் காத்தல், வளைத்தல், தி-2. -