பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிரம்-ஒரு பார்வை 27 தமிழ்மொழியில் உள்ள சொல் நயம் பொருள் நயம் நிறைந்த நூல்களில் முத்தொள்ளாயிரம் தலை சிறந்தது ஆகும். இந்நூலின் சில பகுதிகளே இப்போது கிடைக்கும் வெண்பாக்கள் ஆகும். சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவரையும் பற்றி ஈராயிரத்தெழுநூறு வெண்பாக்களால் இயற்றப்பட்டதாக இருந்திருக்க வேண்டுமென்று இந்நூலைப்பற்றிக் கூறுகின்றனர். தொள் ளாயிரம் தொள்ளாயிரமாக மூன்று தொள்ளாயிரப் பாடல்கள் இருந்தமையில்ை இது முத்தொள்ளாயிரம் என்பதாகப் பெயர் பெற்றதென்றும் சொல்லுவார்கள். இந்நூல் பழந்தமிழ் முடியுடை வேந்தர் மூவரைப் பற் றியும் நாடு, நகர், திறை, தான, யானை, குதிரை, அமர்க் களம், வென்றி, கொடை, புகழ், இன்பம், முதலியவற் ருேடு தொடர்புபடுத்திப் பாடப்பட்ட நூலாகும். 'விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் நூற்பாவுக்கு உரை எழுதும் போது பேராசிரியரும் நச்சி ஞர்க்கினியரும் விருந்தென்பதற்கு உதாரண நூலாக இம் முத்தொள்ளாயிரத்தையே எடுத்துக்காட்டியிருக்கிருர்கள். வேருெரு சூத்திர உரையில் இந்நூலின் கைக்கிளைப் பகுதிப் பாடல்களைப் பேராசிரியர் குறிப்பிட்டிருக்கிருர் r தமிழில் வெண்பா என்ற பாடல் வகையிற் சிறந்து விளங்கும் நூல்களில் இம்முத்தொள்ளாயிரமும் பின்பு நள வெண்பாவும் குறிப்பிடத்தக்கவை. முத்தொள்ளாயிரத் தில் அமைந்திக்கும் உவமை நயமும், இலக்கிய நயமும்,பல் கால் எண்ணி இன்புறற்குரியவை. - . "பிணிகிடந்தார்க்குப் பிறந்த நாள் போல' "வெள்ளந் தீப்பட்டதென வெரீஇ' பெருஞ் செல்வர் இல்லத்து நல் கூர்ந்தார் போல' - - - -