பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நா. பார்த்தசாரதி 'நீல வலையிற் கயல் போலப் பிறழுமே சாலேக வாயிருெறுங் கண்' 'தெங்குண்ட தேரை படுவழிப்பட்டேன் யான்' 'கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போலன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள்.' 3. 'இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் நெஞ்சு' போன்ற அருமையான உவமைகள் எல்லாம் முத்தொள் வளாயிரத்தைச் சேர்ந்தவை. இந்நூலின் நாடு நகர் பற் றிய வருணனைப் பகுதிகளில், பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு முறையே மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வரு கின்றன. பகைப்புலம் பழித்தல், திறைஎயில் கோடல், குதிரைமறம், யானைமறம், களம், வென்றி, புகழ் கைக்கிளை ஆகிய பிரிவுகளின் கீழ்ப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள் ளன. பழந்தமிழரசர் போர் முறை, ஒருதலைக் காதலின் ஏக்கங்கள் ஆகியவை மிக மிக நயமாகக் கூறப்படுகின்றன. நூற்றெட்டு வெண்பாக்களே இப்போது கிடைத்தா லும் நூலின் சிறப்பை இவற்றின் துணையாலேயே முழுமை யாக உய்த்துணர முடிகிறது எனலாம். இதில் பகைப் புலம் பழித்தல், எயில்கோடல், வென்றி இவை குறித்து முத்தொள்ளாயிரம் கூறும் செய்திகளைக் காணலாம். பகைப் புலம் பழித்தல்: இப்பகுதியில் ஐந்து வெண் பாக்கள் உள்ளன. பசிய கண்களையுடைய பெரிய யானை யைப் பெற்றிருக்கும் பகைவரை அழிக்கவல்ல கோக் கோதையின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்தவர் களுடைய தேசங்கள், கரிபரந்து எங்கும் கடுமுள்ளிச் செடி கள் நிறைந்து நரிகள் மிக்கு நான்கு திசைகளிலும் எரி பரந்து அழிந்துபட்டனவாம்.