பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிரம்-ஒரு பார்வை 29 மாலையணிந்த கோக்கோதையின் இலை போன்ற கூரிய வேலைச் சினமூட்டிப் போருக்கு அழைத்தவர்களின் நாடு கள் பாழடைந்து அடையாளமே தெரியாதபடி அழிந்து அறுகும் சுரையும், வேளைப் பூவும் படர்ந்து போயின. செம்பியலுடைய பேரைச் சொல்லிப் புகழைப் பர வாத நாடுகளில் கெடுதலுற்ற மகளிர் இலைச் சருகுகளில் ஈன்ற குழந்தையானது நள்ளிரவில் கூகை பாராட்டத் துயில் கொள்ளும்படியான பரிதாப நிலை ஏற்பட்டது. தென்னனுக்கு நட்புறவாக மறுமொழி தராத பகை மன்னர்களுடைய நாடுகளில்-வாகை மாலைசூடி அரசன் அமர்ந்திருக்க வேண்டிய உவகை நிறைந்த மாடங்களில் எல்லாம் கூகை பேய்க்குப் பாட்டுப்பாடும் நிலைமை ஏற் பட்டு விட்டது. கொல் யானைகளையுடைய பாண்டியர்க் குத் திறை செலுத்தி அடங்காத தேசம் பசுக்களை இழந்து பெண்களை இழந்து, ஆடவர்களை இழந்து, குழந்தைகளே இழந்து பாழ்படும் என்கிரு.ர். - - எயில் கோடல்: போர் செய்யும் வெம்மை மிக்க ஒளி யுமிழும் வேலையுடைய சினங்கொண்ட பாண்டியனே எதிர்த்துக் கொண்ட அரசர்கள் மேல் படையெடுத்து மதிலே வளைத்துக் கோட அவன் முரசம் ஆர்ப்பரிக்கும போதே பகையரசர் காட்டுப் பசுக்கள் நிறைந்த மலைப்பகு திக்கு அப்பால் ஒடிப்போய் வயிறெரிய வெந்து கிடப்பர். எயில்கோடவரும் பாண்டியனை எதிர்த்தலாற்ருர் என்ப தா.ம. வென்றி: பகையரசர்களைக் கண்டு பாண்டியன் மடித்த வாய் சுட்டிய கையாற்றேற்ருன் போல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் தோற்றுப் பணியவும் திறை செலுத்தவும் முன்டே இணங்கியிருந்தால் இந்த நிலை நேர்ந் திராது. மாலை விளங்கும் மார்பினையுடைய பாண்டிய கனின் சினத்தைத் தீர்க்கும் மருந்து அவனுக்கு மண்ணளித்