பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கா. பார்த்தசாரதி துத் தோற்பது ஒன்றே என்று அறிந்தவர்கள் சொல்வார் கள். இவ்வாறு வென்றி என்னும் பகுதியில் கூறப்பட்டுள் ளது. இம்மூன்று பகுதிகளிலிருந்தும் மூவேந்தர்களின் படைத்திறனும், வென்றித் திறனும் அவர்களைப் பகைத் துக் கொண்டவர்கள் தப்புவது அரிது என்பதும் நயம் பெறத் தெரிவிக்கப்படுகின்றன. அழிந்த நாடுகளும், தோற்ற மன்னர்களும் என்னென்ன நிலையடைய முடியும் என்பதும் இப்பாடல்களில் வருணிக்கப்பெற்றிருக்கின்றன. தமிழ் மூவேந்தர்களை எதிர்த்துத் தன் எயிலைப் பாதுகாப் பது என்பது எந்தப் பகையரசர்க்கும் இயலாத செயல் என்பதும் தெரியவருகிறது. ஆகவே தமிழ் மூவேந்தர்களை எதிர்த்து எயில் காத்தலைச் செய்ய யாரும் துணியார் என்ப தா.ம. -