பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நா. பார்த்தசாரதி கும் அளவுக்கு இன்றைய நிலை வளர்ந்திருக்கிறது. நுண் கலைகளோ, இலக்கியக் கலையோ, இரண்டையும் முழுமை யாக உணர மனப்பக்குவமும் நுண்ணுணர்வும் பொது வான தேவைகள். சுவைக்குந் திறன், சுவைப்பயன், மெரு கேற்றுதல் இவையும் பொது, ஆனல் அறிஞர்பெருமக்க ளுடைய நோக்கில் கட்டிடக் கலை, சிற்பக்கலை, சித்திரக் கலை, இசைக்கலை, இவற்றை எல்லாம் விட இலக்கியக்கலை சிறந்ததும் மேம்பட்டதும் ஆகும். உலகின் மிகப் பழமை யான ஆதிகலைகளில் இலக்கியம் முதலிடம் பெறுகிறது. கிரேக்க மொழியில் கவி என்னும் பொருள் தரும் 'poet' என்னும் சொல்லுக்கே படைப்போன்’ என்னும் பொருளைத் தரும் Maker அல்லது Creator என்னும் பொரு ளும் உண்டு என்கிரு.ர்கள். எல்லாக் கலைகளுக்கும், நுண் கலைக்கும் பொதுத் துண்டுதலான முருகியலுணர்வின் முழுத்தாக்கமும் இலக்கியத்தில் இடம் பெறுவது ஒரு தனிச் சிறப்பு ஆகுமெனலாம். அழகுணர்ச்சியும் கலையும் எல்லாக் கலைகளும் நுண்ணுணர்வை அழகியதாக வெளியிடும் சாதனங்களே. கவிதையோ உணர்வை நிரல் படக்கோத்து ஏற்ற ஒலியமைப்புடன் கூடிய சொற்களால் வெளியிடுதலான கலையாகிறது. வெளியிட வேண்டும்மெருகேற்றி நயம்பட வெளியிட வேண்டும் என்ற உணர்வே மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் அழகுணர்ச்சி யைத் தட்டி எழுப்புகிறது. ஆனல் அழகை நுகருவதற்கு முருகியல் நிலைகளைப்பற்றிய விவரங்களை அறிந்து தான் நுகரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நுகரும் போது தானே சுவையுணர்வு-இரசிகத் தன்மை ஏற்படும். கலே கருக்கொள்ளும் நிலை அல்லது உருவாகும் நில்ை வெளியாகும் நிலை அல்லது வெளிப்பாடு என்னும் படிப் படியான வளர்ச்சிகளையுயையது. தஞ்சைக் கோபுரத்தை உருவாக்குமுன் சிற்பியின் மனத்தில் உருவான வடிவமும்