பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நா. பார்த்தசாரதி trance of things, but their inward Signif icance, for this and not the external mannerism and detail is true reality. The artístic representative of history is a more scientific and serious pursuit than the exact writing of history, For the art of letters goes to the heart of things whereas the factual report merely collocates details. (Aristotle) ஆகவே கலைகளுக்கு உள்முகமான நோக்கு இன்றியமை யாததாகிறது. 'தத்துவத்தின் கதை' என்னும் நூலில் *sögð gyUrT 5$' (The story of philosophy by—will Durant) ஒவ்வோர் அறிவித்துறையும் தத்துவமாகத் தொடங்கிக் கலையாக முடிகிறது'-என்கிருர் . Every science begins as philosophy and ends as art " g) மற்ற நுண்கலைகளுக்கு எந்த அளவு பொருந்துமோ பொருந்தாதோ இலக்கியக்கலைக்கு மிகவும் பொருந்தக் கூடியது. கலையைத் தவிர மற்றவை எல்லாம் வரலாற் றின் கடந்த கால விவரங்களாகக் கழிந்து போகக் கூடி யவை. கலை ஒன்று மட்டுமே சிரஞ்சீவித் தன்மையோடு நம்மிடையே தங்குகிறது. 'வாழ்க்கையை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் செய்வது கலை ஒன்றேயாகும்' என்கிருர் ஹென்றி ஜேம்ஸ். It is art that makes life, makes interest makes importance (genry iames) உலிஸிஸ் எழுதிய ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ் இலக்கியப் படைப்பாளியை உலகைப் படைக்கும் கடவுளுடனேயே ஒப்பிடுகிருர், நுண்கலையைச் செய்யவும் இயற்றவும் படைக்கவும் தூண்டுவனவற்றில் நம் விருப் பமே பெரும் பங்கு வகிக்கிறது என்பர். விருப்பமும் முனைப் .பும் இல்லாவிடில் நுண்கலைகளில் எதுவுமே சாத்தியமில்லை எனலாம். கலே அநுபவத்தில் தோய்வதற்கும் மீள்வதற் கும் இடையேதான் நடுவில் கலைப்படைப்பே இருக்கிறது.