பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் நுண்கலைகளும் 35 இலக்கியத் தோற்றம் காந்தியடிகள் கவிதைக்குப் பொருளாக-இலட சியப் பாத்திரமாக இருந்தார். தாகூர் கவிதை இயற்றுபவராக இருந்தார். கவிதையாக வாழ்வது ஒன்று. கவிதையைப் படைப்பது ஒன்று. எந்த மகத்தான இலக் கியப் படைப்பும் அதை இயற்றுவோனின் அசிரத்தை யோடு நிகழ்வது இயலாது. படைப்பவனின் ஆசையும், முனைப்பும் இலக்கியப் படைப்புக்கு முக்கியம்.அதனுல்தான் மகாகவி கம்பர் ஆசை பற்றி அறையலுற்றேன்' என்று இராமகாதையை இயற்றுமுன் குறிப்பிட்டுத் தொடங்கி ர்ை. ஈடுபாடும், ஆசையும், முனைப்பும், படைப்புக்கு அவ சியமானவை ஆகும். . . . சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகள் சீத் தலைச் காத்தனர் வாயிலாகக் கண்ணகியின் கதையைக் கேட்டார். அப்படிக் கேட்ட போது அம்மாபெரும் பத் தினியின் வரலாற்றில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அவருடைய ஈடுபாடு ஆசையாயிற்று. ஆசை பாடும் முனைப்பாயிற்று. - : "சூழ்வினைச் சிலம் புகாரணமாக நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று சிலப்பதிகாரத்தைப் பாடத் தொடங்கினர்.வெறும் உணர்ச்சி முனைப்பு மட்டுமே.கவிதையாகி விடுவதில்லை. குல சேகராழ்வார் இராம காதையைக் கேட்டார். சீதையை இராவணன் துக்கிச் சென்ருன்-எனக் கேட்ட அளவில் தாம் கேட்டுக் கொண்டிருப்பது முன்பு நடந்த கதை என்ப தையும் மறந்து உடனே சீதையை மீட்கப் படையோடு புறப்படுமாறு தம் சேனைத் தலைவர்களுக்கு ஆணையிடு மளவு போய்விட்டார். இத்தகைய உணர்ச்சி வேகம் கட் டுப்பட்டு உணர்ச்சி வேகத்திலிருந்து மீண்ட பின்னரே இலக்கியப் படைப்பை ஒருவன் மேற்கொள்ள முடியும்.