பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 巧打。 பார்த்தசாரதி. துண்கலைகளுக்குள் இருப்பதைவிட இலக்கியத்தில் கற்ப பனைக்கு அதிக இடம் அளிக்க முடியும். நுண்கலைகளில் சிற். பம், ஒவியம் போன்றவற்றில் பல திறன்களையும் வடி வமைப்பிலேயே காண்பிக்க முடிவது போலன்றி வடிவம், கற்பனை பொருள் உணர்வு அனைத்திலும் திறன் காண். பிக்க முடிவது இலக்கியத்தின் சிறப்பான தன்மை ஆகும். கலையிற் போலவே, நுண்கலைகளிற் போலவோ அல்லா மல் இலக்கியம் நவில் தொறும் நவில் தொறும் நலம் பல பயக்கவல்லது. அறிதோறறியாமை காட்டி வியக்கவைக்க வல்லது. - - துண்கலைகளில் பலவற்றிற்கு உள்ள ஒரியல்பு படைப் பாளியின் மனே தர்மத்திற்கும் உள் மனச் சிந்தனைக்கும் அதிக இடமளிக்க இயலாமற்போவது. ஆனல் இலக்கியப் படைப்பிலோ படைப்பாளியின் மனே தர்மமும் உள் மன ஒட்டங்களும் படைப்பில் இடம் பெற வழி செய்து கொள்ள முடியும் என்பது தனிச் சிறப்பம்சம் ஆக விளங்கு கிறது. அகராதியிலும், நிகண்டிலும் உள்ள சர்வ சாதா ரணமான பழைய சொற்களுக்கே இலக்கியப் படைப்பாளி புதிய உத்வேகத்தைத் தந்துவிட முடிகிறது. கற்பனைத் திறன் - இலக்கியத்தையும் துண்கலைகளையும் வேறுபடுத்தி இலக்கியத்தை உயர்த்திக் காட்டுவதில் கற்பனைத் திறன் பெரிதும் பயன்படுகிறது. இலக்கியத்தை நிலைக்கச் செய்வ. தற்கும் நயம் நிறைந்ததாக்குவதற்கும் கற்பனைத்திறன் பெரிதும் பயன்படுகிறது. இசை, சிற்பம், சித்திரம் எல்லா வற்றிற்கும் கற்பனை வேண்டும் என்ருலும் கற்பனையின் முழுப்பரிமாணமும் பயன்படுகிற இடமாக இலக்கியப் படைப்பு விளங்குகிறது. நுண்கலைகளிலிருந்து இலக்கியப் படைப்பை உயர்த்திக் காட்டுகிற இடம் இது. பொருள்க ளைப் பாடலில் சித்திரிக்கும் முறையிலேயே மனத்தைப் பர் வசப்படுத்தி மெய்ம் மறக்கச் செய்து விடுவதற்கு இலக்கிய ஆசிரியல்ை முடிகிறது. சாதாரண விஷயத்தைக்கூட ஒரு