பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே கலைக்காகவே 43. படைப்புக்கள் என்று கூறுவோர் எண்ணிக்கை அதிக மாகவே இருக்கிறது. 'கலாசாரம், சமயம் திண்மையான கருத்தோட்டம், உணர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மை, மிகுதி) யான வாழ்க்கைப் பயன்களாகும் நன்மைகளைத் தருதல், என்னும் இவையே கவிதையின் பயன்கள். இப்பயன் அமையாத கவிதைகள் வெறும் ஒலித் தொகுதிகளே'என்று ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் (I.A. Richards) கூறுகிரு.ர். மானிடவர்க்கத்தின் உவகைப் பெருக்கிற்கு உதவுமா ல்ை தாழ்த்தப்பட்டவர்களை உயரச் செய்யவும் விடுதலே பெறச் செய்யவும் உறுதுணையாக இருக்குமானல், நம் மைப்பற்றியும், நாமிருக்கும் உலகைப்பற்றியும் அறிந்து. கொள்ள உதவுமானல் நம் இதய நிலையை விரிவுபடச் செய்யுமானல் அது சிறந்த கலைப் படைப்பாகும். மானிட சமுதாயத்தின் மனச்சாட்சியாகவும், மனித வாழ்வின் இலட்சிய பீடமாகவும் அக்கலை பயன்படும்'-என்று வால்டேர் பேடர் (Waltair Pater) கூறுகிருர், 'மனித வாழ்க்கையைப் பற்றிய விமர்சனமே கலைப்படைப்பு. அழி வில்லாத உண்மையும் ஆழமும் மிகுதியாகப் பெற்றுத் திகழுவதே நல்ல கவிதையின் அடையாளம்'-என்கிருர் ஆர்னல்டு. . அழகை வழிபடுவதால் அழகை ஆதாரமாகக் கொண்டு பிறக்கும் கலைப் படைப்பை மேலும் மேலும் ஆராய்ந்து பயன் காண வேண்டும் என்றும், ஆராய ஆராய அதில் புதுப்புது தயங்கள் பிறக்கும் என்றும் இந்த இரண்டாவது பிரிவினர் கருதுகின்றனர். சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி போன்ற நூல்களில் சில வரிகளில் மட்டும் நீதி போதனை வருவது எந்த வகை யிலும் அவற்றின் அழகுணர்ச்சியைப் பாதிக்கவில்லை. ஆகவே நீதிபோதனை வருவது ஒரு குறையாகிவிடாது என்று தெரிகிறது, நீதிபோதனையே வராமலிருக்கும் நிலை