பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நா. பார்த்தசாரதி றுக் குறிப்புக்களையும் சான்றுகளையும் தேடிக் கான முடியும். தமிழ் இலக்கண 57ುಹ6ಗಿದು மிகவும் தொன்மையான தாகக் கருதப்படுகிற தொல்காப்பியம் பழமொழியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் எண் மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் - குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப’’ (165-தொல் சொல் செய்யுளியல்) தமிழில் தொல்காப்பியர் முதுமொழி என்று குறிப்பிடும் பழமொழியை முதுசொல் பழஞ்சொல், சொலவு, சொலவடை பழமொழி, வசனம், என்று சொற்ருெடர்க ளாலும், சொற்களாலும் வழங்குகிருர்கள் மக்கள். மலே யாளத்தில் பழஞ்சொல் என்றும், கன்னடத்தில் நான் நொடி என்றும் குறிப்பிடப்படுகிறது இது. பழமொழி. யைக் குறிக்கும் வேறு பிரயோகங்களும் நூல்களில் காணக் கிடைக்கின்றன. உலக மொழி (குமரேசசதகம் 91) மூத் தோர் சொல்வார்த்தை அமிர்தம் (கொன்றை வேந்தன்) என்ற பிரயோகங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். தமிழ், மொழியிலுள்ள மிகப் பழைய இலக்கியங்களிலேயே பழ மொழிகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'-என்ற ஒரு பழமொழியே திருக்குறளிலும், பழமொழி நானுாற்றிலும், அகநானுாற். றிலும் பயின்று வந்திருக்கிறது. எனவே பழமொழிகளின் காலத்தை வரையறுப்பது மிகவும் அரியதாகும். பழமை, முதுமை, தொன்மை என்பது போல் அதற்கு முன் இணைந். திருக்கும் அடைமொழிகளே அதன் தொன்மையை உணர்த்தப் போதுமானவை ஆகும். இனிப் பழமொழி. வரலாற்றைக் கவனிக்கலாம். - . . .