பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நா. பார்த்தசாரதி றும் உவமைத் தொடர்கள், நையாண்டி ஆகியவை இப் பழமொழிகளில் நிரம்பியுள்ளன என்றும் இதன் தொடக் கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 1895-ல் பயிர்த் தொழில் பற்றிய பழமொழிகளும், வழக்குத் தொடர்களும், ஆங்கில அடிக்குறிப்பு முன்னுரை யோடு சென்னை அரசாங்கத்தின் விவசாயத் துறையின ரால் வெளியிடப்பட்டது. - 1899-ல் திருமணம் செல்வக் கேசவராய முதலியாரால் "ஆங்கிலம் தமிழ் ஒப்பியற் பழமொழிகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் ஒத்த கருத்துடைய ஆங்கி லப் பழமொழிகளையும், தமிழ்ப் பழமொழிகளையும் ஒப்பு நோக்கி ஆராயப் பயன்பட்டது. - - - 1897.ல் ஹெர்மன் ஜென்ஸன் என்ற பெயரையுடைய பாதிரியார் ஒருவர், 'தமிழ்ப் பழமொழிகளின் வகைப் படுத்தப்பட்ட தொகுப்பு' என்ன நூலைப் பொருளமைப்பு (பழமொழிகளின்) முறையில் தொகுத்து வெளியிட்டார். 1913-ல் அனவரத விநாயகர் என்பவர் 'பழமொழி அக ராதி'-என்ற நூலைத் தமிழில் வெளியிட்டார். 1931-ல் இலங்கையைச்சேர்ந்த திரு. எம். சபாரத்தின சிங்கம் என்பவர் விவசாயத்தைப் பற்றியவையாகிய 650 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். 1940-ல் வெள்ளவத்தை மக்கள் கவிமணி மு. இராம லிங்கம் என்னும் பெயரையுடைய ஈழத்துக் கவிஞர் பழ மொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். - - 1946-ல் திருமதி கஸ்தூரி திலகம் என்பவர் ஆயிரத் தொரு அபூர்வப் பழமொழிகள்'-என்ற நூலைப் பதிப்பித் தார். - - 1952-ல் பெர்லிவல் பாதிரியாரின் பதிப்பைத் திருத் திய மறுபதிப்பு வெளியிடப்பட்டு ஆராய்ச்சிக்குப் பயன் பட்டது. . . . . . . . . . .