பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - நா. பார்த்தசாரதி தினவர்த்தமானி (1855), ஞானபானு, விவேக சிந்தா மணி, சுகுணபோதினி, விவேகபானு, சத்தியநேசன் (கதைகள் வாயிலாகப் பழமொழிகளை வெளியிட்டது) பிற் காலத்தில் கலைமகள், சக்தி, ஆனந்தவிகடன், கல்கி முத லிய இதழ்கள் எல்லாம் பழமொழிகளைப் பல்வேறு சமயங் களில வெளியிட்டு உதவின. " தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விதம் வித மாக வழங்கும் பழமொழிகள் அனைத்தையும் தொகுக்கும் பணி அல்லது ஆராய்ச்சி என்பது இன்னும் முற்றுப்பெற்று விடவில்லை. பழமொழிகள் அள்ள அள்ளக் குறையாத சுரங்கமாகவே உள்ளன. அவற்றைப் பற்றிய வரலாறும் ஆராய்ச்சியும் ஒரு குறிப்பிட்ட நாளுடனே தேதியுடனே முடிந்துவிடுவது என்பது இயலாத காரியம். நாட்டுப்புற இயலின் ஆய்வுகளுக்குப் பயன்படுவனற்றில் முக்கிய மானவை பழமொழிகள் தமிழ்ப் பழமொழிகள் வரலாற் றுக் கலாசாரக் களஞ்சியமாக இருப்பதால் அவற்றின் வர லாறும் ஆய்வும் வளர்ந்து பெருகிக் காலந்தோறும் முக்கிய நிலை எய்தி வருகின்றன. - -