பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கா. பார்த்தசாரதி காணலாம். பாலைத்திணை என்னும் உரிப்பொருளைப் பாடு வதில் சங்ககாலப் புலவனை பாலைபாடிய பெருங்கடுங்கோ வின் சிறப்பு இணையற்றது. ஆனல் பாலை என்று கூறப் படும் முதற்பொருளைப் பாடி நிலத்தின் வெம்மை அருமை. களை வர்ணிப்பதில் தமக்கு முன்னே பின்னே ஒப்பாரும். மிக்காரும் இன்றி விளங்குகிருர் ஜெயங்கொண்டார். சுருக்கமான அளவில் பாலை நில வருணனையைப் பெருக்க மாகச் செய்து புகழ் பெற அவரால் முடிகின்றது. பாலையும் பரணியும்: 'பரணி என்னும்பிரபந்த வகை" 'ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவதற்கு வகுப்பது பரணி என்னும் பாட்டியல் நூற்பாவால் விளங்குகிறது. அத்தகைய பரணி நூலில் பாலே நிலமும், பாலைநில வருண னையும் எத் தொடர்பில் வருகின்றன என்று கவனிக்கலாம். பரணி நூலில் வென்ற அரசனின் போர்க்களத்தில் பேய்கள் கூழ் அட அப்பேய்களின் தெய்வமாகிய காளி தேவி உறையும் பாலை நிலத்தைப் பற்றி வருகிறது. இப் பகுதிக்குக் கலிங்கத்துப்பரணியில் காடுபாடியது எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. - களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின் உளப்போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம்' என முதல் தாழிசையிலேயே இத்தொகுப்பு ஜெயங்கொண் டாரால் கூறப்படுகிறது. பாலே நிலத்தை வருணிப்பதில் அழகுணர்ச்சி (Aesthetic Sense) ஒன்றுமில்லை என நம் மனத்தில் தோன்றிலுைம் ஜெயங்கொண்டார் தமது திற ல்ை அதையும் அழகு உணர்வு தோன்றச் செய்து விடுகிரு.ர். - - வெம்மையிற் செம்மை: வறட்சியையும் திரட்சியுடன் பாடுகிருர், வெம்மையைச் செம்மையுற வருணிக்கிருர்.