பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிங்கத்துப்பரணியில் பாலைநில வெம்மை 53 மரங்களின் கரிந்து தீய்ந்த நிலைமை வாடிய வகைமை இவைகள் முதலில் கூறப்படுகின்றன. பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய் உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஒமை கலந்தவே. உதிர்ந்த வன்னி ஒடுங்கு நெல்லி உணங்கு தும்பை உலர்ந்தவேல் பிதிர்ந்த சுள்ளி சிதைந்த வெள்ளில் பிளந்த கள்ளி பரந்தவே வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்தவேல் முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிறைந்தவே. மேற்கண்ட மூன்று தாழிசைகளாலும் வெம்மையால் வெந்து வாடிய பாலே நில மரங்களின் நிலைமையைக் கூறிய பின் அடுத்து வெப்பமிகுதி பாலே நிலத்தின் பரப்பில் உண் டாக்கிய கொடுமைகளைச் சித்திரிக்கிரு.ர். கதிரவன் அப் பாலைநிலத்தின் தரைகளிலே வெப்ப மிகுதியினல் பிளந்து வெடிப்புண்ட ஒவ்வொரு பிளவிலும் தன் காதலியாகிய சாயை நுழைந்திருப்பாளோ எனத் தேடுகிறவனைப் போலக் கதிர்க் கரங்களால் தேடினன் என்கிருர், பருந் தின் நிழல் அப்பாலேவனத்தைவிட்டு (நிழல் என்பதே) ஒட முயல்வது போல (சிறகசைத்துப் பருந்து பறப்பது) இருக் கும். நிற்கிற நிழல் என்பது அங்கே ஓரிடத்துமே இல்லை என்கிருர். சூரியனுக்குப் பயந்து உறிஞ்சிய நீர் போய் வற் றியதையறிந்து நிழலும் பயப்படும் என்கிரு.ர். 'தீயஅக் கொடிய கானகத்தரை - திறந்த வாய்தொறு நுழைந்தஅச் சாயை புக்கவழி யாதெனப்பரிதி தன்கரங்கொடு திளைக்குமே தி-4. -