பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கா. பார்த்தசாரதி ஆடுகின்ற சிறை வெம்பருந்தினிழல் அஞ்சிஅக் கடுவனத்தைவிட் டோடுகின்ற நிழல் ஒக்கும் நிற்குநிழல் ஒரிடத்தும் உள அல்லவே ஆதவம் பருகும் என்று நின்ற நிழல் அங்கு நின்றுகுடி போனவப் பாதவம்புனல் பெருது ணங்குவன பருகும் நம்மைஎன வெருவியே’’ பாலை நிலத்தின் நெருப்பையே தகடாக உருக்கி வார்த் தாற் போன்ற வெம்மையும், அதனிடையே பறக்கும் புருக் கள் புகை திரண்டாற்போல் தோன்றுவதும், நாக்குலர்ந்து போய் வறட்சியால் செந்நாயின் நாவிலிருந்து சொட்டும் நீரை மான் நாவில்ை நக்கி விக்குவதும் கூறப்படுகின்றன. இந்த அளவு தகிக்கும் வெம்மையுள்ள பாலை நிலம் பூமியில் இருக்கிறது என்று பயந்துதான் தரையில் கால் பாவி நடப் பதற்கே தேவர்கள் பயப்படுகிருர்கள் என்று கற்பனை செய்து அழகுறப் பாடுகிருர் ஜெயங்கொண்டார். பாட முடியாத வறண்ட பொருளாகிய பாலை நில வெம்மை யைத் தம் கற்பனையால் வளப்படுத்துகிருர் கவிச் சக்கர வர்த்தி. - செந்நெருப்பினைத் தகடு செய்துபார் செய்ததொக்கும் அச்செந்தரைப் பரப்பு அந்நெருப்பினிற் புகை திரண்டதொப் பல்ல தொப்புரு அதனிடைப் புரு. தீயின் வாயினிர் பெறினும் உண்பதோர் சிந்தை கூரவாய் வெந்துலர்ந்து செந் நாயின் வாயினர் தன்னை நீரென நவ்வி நாவினல் நக்கிவிக்குமே இந்நிலத்துளோ ரேக லாவதற் கெளிய கானமோ வரிய வானுளோர் அந்நிலத் தினில் வெம்மையைக் குறித் தல்லவோ நிலத் தடியிடாததே.