பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 நா. பார்த்தசாரதி பெயர்ந்து ஓடாமல் நெடுமோடி நிறுத்திய பேய் தனி யாக நின்று பெருமூச்சு விடுவதைப் போல மரங்கள் புகைந்து கரிந்துள்ளன. வறண்டபேய் தன் நாக்கை வெளியே நீட்டுவதைப் போல் முற்றிய பழைய மரப் பொந்திலிருந்து முது பாம்பு தலையை நீட்டுகிறது. சூரு வளிக் காற்றுச் சுழன்று சுழன்று அடிக்கிறது. அது கானல், நீரின் பிரவாகத்தில் ஏற்படும் சுழிகளைப் போல் இருக் கிறது. . 'நிலம்புடைபேர் ந் தோடாமே நெடுமோடி நிறுத்திய - பேய் புலம்பொடு நின்றுயிர்ப்பனபோல் புகைந்து மரங்கரிந் - துளவால் வற்றியபேய் வாய்புலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ - போல் முற்றிய நீள் மரப்பொதும்பின் முதுபாம்பு புறப்படு மால் விழிசுழல வருபேய்த்தேர் மிதத்துவரு நீரந்நீர்ச் சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். எரிந்த உடல்களின் சாம்பரில் இடையிடையே தெரியும் செம்மை புகை மூடிய தழல் போலப் பாலைநிலத்திலே விளங்குகின்றன. மூங்கில் வெடித்துச் சிதறுகிற முத்துக்கள் பாலைவனத் தின் வெம்மை தாங்காமல் அம்மூங்கிலே சிந்தும் கண்ணிர் போல் இருக்கிறது. மண்ணின்மேல் சிதறிய அம்முத்துக்கள் பூமித்தாயின் உடலில் அரும்பிய வியர்வைத் துளிகள்போல வும், கொப்புளங்கள் போலவும் காட்சியளிக்கின்றன. இக் கற்பனைக் கருத்துக்கள் அலுப்பூட்டாத வகையில் பாலைநில வெம்மையைப்பற்றிக் கூறுவதற்கு ஆசிரியருக்கு உதவு கின்றன. - 'சிதைந்த உடல்சுடுகடலைப் பொடியைச் சூறை சீத்தடிப்பச் சிதறியஅப் பொடியாற்செம்மை