பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நா. பார்த்தசார்தி பாலைவன வெம்மையைப் பாட்டுடைத் தலைவன் முன்பு அழித்த பகைவர் வனத்தின் வெம்மையோடு ஒப்பிட்டு முடிப்பதன் மூலம் பரணி ஆசிரியருக்கு இருவகை நன்மை எய்துகிறது. பாட்டுடைத் தலைவனின் சிறப்பை உயர்த்து வது ஒரு நன்மை. பாலே நில வெம்மையை முத்த்ாய்ப்பு வைத்துக் கூற முடிவது மற்ருெரு நன்மை. இவ்வாறு தம் ஆற்றல் முழுவதையும் செலவிட்டுப் பாலைநில வெம்மை யைப் பாடி முடிக்க ருர் ஜெயங்கொண்டார். முடிவுரை: தெய்வப்பரணி எனப் புகழ் பெற்ற கலிங் கத்துப்பரணியில் கடைதிறப்புப் பகுதிக்கு அடுத்தபடி சிறப்பான வருணனை நயங்கள் காடுபாடிய பகுதியில்தான் உள்ளன. - குறிஞ்சிநில அழகையோ, மருதநில நலத்தையோ தென்றல் காற்றின் சிறப்பையோ பாடுவது போலப் பாலே நிலத்தையும் அதன் வெம்மையையும் பாடுவது அவ்வளவு எளிய செயல் அன்று ஆல்ை ஜெயங்கொண்டார் அந்த அரிய செயலை மிகவும் அநாயாசம்ாக நிறைவேற்றியிருக் கிருர் என்றே கூற வேண்டும். சலிப்பூட்டாமல் அலுப் பூட்டாமல் மிகச் சில தாழிசைகளின் மூலமாகப் பாலைநில வெம்மை கூறப்படுகிறது. பாட்டின் நயத்தாலும், கற். பன வளத்தாலும், வருணனைத் திறத்தாலும் தாழிசை களின் ஓசை இன்பத்தாலும் இங்கே வெம்மை கூட இனி மையாகிறது. பாலையோ வெய்யது. எனினும் அதைப் பற்றிய ஜெயங்கொண்டாரின் கவிதையோ தண்ணிய நறு. நிழலினும், குளிர் பூஞ்சுனேயினும் இனியதாக அமைந்துள் ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. பாலைநில வரு ணனை என்று வரும்போது சங்க காலத்துப் பெருங்கடுங் கோவைவிட விஞ்சி நிற்கிருர் ஜெயங்கொண்டார். அவ ருடைய சிறப்புக்கு இதுவே அடையாளமாகும். வறண்ட பொருளையும் வளமான தமிழில் வருணிக்க முடியும் என்ப தற்குக் கலிங்கத்துப் பரணியில் வரும் பாலைநில வருண னேயே ஒர் எடுத்துக்காட்டாக விளங்க முடியும்.