பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. நா. பார்த்தசாரதி பாதுகாத்த சிறப்புக்கள், எல்லாவற்றையும் நூலிறுதியில் கூறி அவர்களைப் போல் நீயும் நீடு வாழ வேண்டுமெனத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனுர் வாழ்த்துகின்ருர். 7. நெடுநல்வாடை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தலைவிக்கு அவன் போரின் பொருட்டுப் பிரிந்து சென்றதாலுளதாகிய பிரிவுத் துன்பம் நீங்குதற் பொருட்டு அவன் விரைவில் திரும்பி வருவான் என்று கொற்றவையைப் பரவும் பெண்மணி கூறியதாக மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனர் செய்தது இந்நூல், இதில் கூறப்பட்ட பிரிவு கூதிர் காலத்தில் நிகழ்ந்தது. அர சர்க்கு நயந்தருவதாய்த் தலைவிக்கு நெடியதாய்த் தோன்று. வது வாடைக்காலமாகையில்ை இந்நூலுக்கு நெடுநல் வாடை என்று பெயர் வந்தது. 8. குறிஞ்சிப்பாட்டு - பத்துப் பாட்டில் எட்டாவதாகிய குறிஞ்சிப்பாட்டு தோழி செவிலிக்குத் தலைவியின் இயல்பு கூறி அறத்தொடு நிற்கும் கூற்ருகக் கபிலர் பாடியது. இக்குறிஞ்சிப்பாட்டு. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவிக்கும் பொருட்டுக் கபிலரால் பாடப்பட்டது என்பார்கள். - 9. பட்டினப்பாலே . - - சோழன் கரிகாற் பெருவளத்தான் மீது கடியலூர் உருத்திரங்கண்ணனர் பாடியது பட்டினப்பாலே என்னும் இப்பாட்டு. இதனைப்பாடிப் பதினறு நூருயிரம் பரிசுபெற். ருர் உருத்திரங்கண்ணனர் என்று கூறுவர். பூம்புகார் நக. ரின் சிறப்பு இந்நூலில் புனைந்துரைக்கப்பட்டிருக்கிறது. 10. மலைபடுகடாம் - பத்துப்பாட்டினுள் இறுதியாக இருப்பது மலைபடு: கடாம். இதற்குக் கூத்தராற்றுப்படை' என்று மற்றெரு