பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'66 நா. பார்த்தசாரதி மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கற்றளிகள் எழுப்பப்பட் .டன. மாமல்லபுரம் என்ற நகரமே இவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் உருவாயிற்று. அப்புதிய நகரில் கற்பாறை யில் குடையப்பட்டுள்ள கோவில்களும், கடற்கரைக் கோயிலும் பல சிற்பத் தொகுதிகளும் இவல்ை படைக்கப் பட்டவை ஆகும். சிறப்புமிக்க காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவில் இவன் கட்டுவித்ததே. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் காஞ்சீ புரத்தில் முத்தேசுவரர் கோயிலையும, வைகுந்தப் பெரு மாள் கோயிலையும் கட்டுவித்தான். அபராஜித பல்லவன் காலத்தில் அவன் மனைவி பேரால் உக்கல் என்ற ஊரில், "புவனமாணிக்க விஷ்ணு கிரகம்'-என்ற திருமால் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இவ்வாறு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பலவாகும். கோவில் களுக்குத் தொடர்புடையனவாகவும், தனித்தும் சிற்ப ஓவியக்கலைகளும் வளர்ந்தன. பல்லவர்கால ஒவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றிற்குத் தனித்தன்மை உண்டு. அவற் றின் தனித்தன்மையையும் சிறப்பியல்புகளையும் இனிமேற் காணலாம். சிற்ப ஓவியக் கலைகள் சுவர்கள், தூண்களில் ஒவியம் தீட்டுதல் தவிரக் கற் பாறைகளிலும் ஒவியம் தீட்டும் வழக்கத்தைப் பல்லவர்கள் மேற்கொண்டிருந்தனர். விசித்திர சித்தன் என்னும் சிறப் புப் பெயரைக் கொண்டிருந்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் தட்சிண சித்திர' என்னும் ஒவிய நூலை இயற்றி அளித்தான் என்பதை மாமண்டுர்க் குகைக் கோவிற் கல் வெட்டிலிருந்து அறிகிருேம். 'சித்திர காரப் புலி’ என்ற விருதுப் பெயரும் அவனுக்கு இருந்திருக்கிறது. புதுக் கோட்டைச் சீமையில் சிற்றன்னவாசல், மலையடிப்பட்டி ஆகிய இடங்களிலும், மாமல்லபுரம் ஆதிவராகர் குகைக் கோயில், மாமண்டூர்க் குகைக் கோயில் ஆகியவற்றிலும், வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ள அர்மாமலையைச்