பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர்காலக் கலைகள் 67 சேர்ந்த குகைக் கோயிலிலும் பல்லவர் காலத்துக் கற் பாறை ஓவியங்களைக் காணலாம். சிற்ப நகரமான மாமல்லபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் ஆகியவற்றின் சிற்பச் சிறப்புக்கள் ஈடு இணையற்றவை. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் கைதேர்ந்த சிற்பி களைப் பல்லவர்கள் ஆண்ட தமிழ்நிலப் பகுதியிலிருந்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொண்டான் என்ற குறிப்பு வரலாற்றில் வருகிறது. பல்லவர்கள் திறமை வாய்ந்த சிற்பிகளைப் பேணிப் பாது காத்தனர் என்பதை இக்குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. ஒவியங்களைப் பொறுத்தவரை சிற்றன்னவாசல் குகை ஆயின் ஒவியங்கள் இப்போது முழுமையாகக் காணக் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் குகையின் உட்பகுதி முழு வதும் வண்ணம் பூசப்பட்டுச் சித்திரங்கள் தீட்டப் பெற் றிருக்க வேண்டும் என்று உய்த்துணர இப்போதும் இட மிருக்கிறது. இப்போது குகையின் மேல் தளத்திலும், பிற பகுதிகளிலும், தூண்களிலும் மட்டுமே ஒவியங்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன. தாமரை மலர், மீன்கள், எருமைகள், யானைகள் முதலியவையும், மூன்று மனித உருவங்களும் சித்திரிக்கப்பட்டுள்ள ஒரு பூம்பொய் கையே இப்போது அக்குகையில் முழுமையாக உள்ள ஒவி யங்களில் சிறப்பானதாகும். அர்மாமலை குகை ஓவியங் களில் செடி, கொடி, பூக்கள் ஆகியவைகளே காணப்படு கின்றன. * * . . - : , கல்வி-காவியங்கள் - கல்வியிற் சிறந்த காஞ்சி நகரம் என்று கூறும் அள விற்கு அக்காலக் காஞ்சீபுரமும், பல்லவ நாடும் சிறந்திருந் தன. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், வடமொழி வளர்ச்சிக் கும் பெரிதும் பாடுபட்டனர், தலைசிறந்த தமிழ்ப் புலவர் களும் வடமொழிப் புலவர்களும் பல்லவர் ஆட்சியில்