பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமும் கல்வியும் - இந்தியப் பொது வாழ்க்கையில் சுவாமி விவேகாநந்த ரின் தோற்றம் உண்டாக்கிய எழுச்சியும் உத்வேகமும் அதற்குப்பின் வந்த பல்லாண்டுகளுக்கும் நீடித்தன. பின்பு மகாத்மாகாந்தி வந்தார். ஒழுக்கமற்ற கல்வி, ஒழுக்க மற்ற வருமானம், ஒழுக்கமற்ற புகழ் ஆகியவற்றை வெறுக்கும் நிலை சமூகத்தில் நீடித்தது. விவேகாநந்தரின் ஞான எழுச்சியும், காந்தியடிகளின் சமுதாய அரசியல் எழுச்சிகளும் இலட்சியமாக நீடித்தாலும் சுதந்திரத்துக் குப் பிந்திய இந்திய சமூகத்தில் மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மாறித் தேய்ந்தன. ஞானமும், தெய்வ நம்பிக்கை யும், அறங்களும் கூட மாறத் தொடங்கின. நல்ல நம்பிக் கைகள் தளர்ந்தன. வெற்றியை அடைய அவசரமும், தோல்வியை அடையத் தயக்கமும் பெருகியது. எதையும் பண அடிப்படையில் பார்க்கும் புதிய உலகியல் பார்வை, வந்துவிட்டது. . . . . . . இலட்சிய வாழ்க்கை வாழ்வதும் இலட்சிய வாதம் புரிவதும், நல்ல இலட்சியங்களை உயர்த்திப் பேசுவதும் வாழ்க்கையை உயர்த்தும் என்ற எண்ணம் தளர்ந்திருக்கி றது. நிதிவழி நேயம் நீட்டும் பொது மனப்பான்மையே, எங்கும் வளர்ந்திருக்கிறது. இந்தப் பொது மனப்பான். மைக்குக் காரணம் நமது கல்வி முறை. இன்றைய கல்வி முறையைத்தான் சொல்கிறேன். ஒழுக்கம்; பக்தி, சிரத்தை யோடு இணைந்த பாரம்பரியமான இந்தியக் கல்வி முறை,