பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நா. பார்த்தசாரதி: கெளரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர் தர்மபாலர் என்பவர் காஞ்சியிலிருந்துதான் நாலந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்ருர் என்று கூறப்படுகிறது, அந்த அளவிற்குக் காஞ்சி மாநகரம் கல்வியிற் சிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியிருக்கிறது என்று தெரிய வருகிறது. இது தவிர வும் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் அவைக் களத்தில் இருந்த புலவரான பாரவி' என்பார் கிராதார் ஜூனியம் என்னும் காவியத்தை இயற்றினர். பல்லவர் காலத்துப் புலவர் பெருமக்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பிரா கிருத மொழியிலும் வல்லவர்களாக இருந்தார்கள். சிறந்த வடமொழிப் புலவராகிய தண்டி காவ்யா தரிசம்' நூலை இயற்றியது பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான். அவந்தி சுந்தரிகதா என்ற நூலும் அவர்கள் காலத்தில்தான் இயற்றப்பட்டது. மகேந்திர வர்மன் மத்த விலாசப் பிர ஹசனம்' என்னும் நாடக நூலே இயற்றினன். லோக விபாகம்' என்ற நூலும் இக்காலத்தில்தான் எழுதப்பட் டது. பல்லவர்கள் காலத்தில்தான் நந்திக் கலம்பகம் எழுதப்பட்டது. தமிழுக்காக உயிரைக் கொடுக்க முன் வந்த நந்திவர்மனின் சிறப்பை'இது காட்டுகிறது. மூன்ரும்: நந்திவர்மனின் காலத்தில்தான் பெருந்தேவனர் பாரத வெண்பாவை இயற்றியருளினர். காஞ்சிபுரத்தில் பல கடிகைகளும் சமண, பெளத்தப் பள்ளிகளும் இருந்தன. கல்வி காவிய வளர்ச்சியில் பல்லவர் காலம் சிறப்புற விளங்கியது. இசை-நடனக் கலைகள் இசைத்துறையிலும், நடனத் துறையிலும், நாடகத். துறையிலும் கூடப் பல்லவர்காலம் புகழ் பெற்று விளங் கியது. பல்லாவரம் குகைக் கோவிற் கல்வெட்டு ஒன்றில் மகேந்திரவர்மன் சங்கீரண சாதி-எனக் குறிக்கப்படுவ: தால் இவன் தாள வகைகள் ஐந்தினுள் ஒன்ருகிய சங்கீர ணத்தைக் கண்டு பிடித்ததாக அறியலாம். ஏழு நரம்புக ளைக் கொண்டிருந்த வீணையே எங்கும் பழக்கத்தில் இருந் ததை மாற்றி எட்டு நரம்புகளைக் கொண்ட புதிய